சென்னை: பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 82 காசுகள் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
ஜூன் மாதத்தில் மட்டும் மூன்றாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி 75 பைசா உயர்த்தப்பட்டது. இதனையடுத்து 6ம் தேதி 2 ரூபாயும் 28ம் தேதியான நேற்று 1ரூபாய் 82 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னையில் 69 ரூபாய் 39 காசுகளாய் இருந்த பெட்ரோல் விலை 71ரூபாய் 71 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியைப் பொறுத்தவரையில் தற்போதைய விலையான 66 ரூபாய் 39 காசுகளிலிருந்து 68 ரூபாய் 58 காசுகளாகவும், கொல்கத்தாவில் 73 ரூபாய் 79 காசுகளிலிருந்த 76 ரூபாய் 10 காசுகளாகவும் உயர்ந்துள்ளது.
மும்பையைப் பொறுத்தவரையில் பெட்ரோலின் விலை 74 ரூபாய் 60 காசுகளிலிருந்து 76 ரூபாய் 90 காசுகளாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வுஇந்த மாதத்திலேயே 2 ஆவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment