தன்னம்பிக்கை இவ்வுலக வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் இருக்கக்கூடிய பலம் சேர்க்கும் ஒன்றாகும்.முயற்ச்சியுடையார் இகழ்ச்சியடையார் என்றொரு முது மொழி உண்டு. அதன் அந்தரங்க அர்த்தமே தன்னம்பிக்கையை உண்டு பண்ணுவதேயாகும்
சாகப்பிறந்தவனாயினும் சாதித்து சாகுபவனே சாலச்சிறந்த மனிதன். அதற்கு மூலாதனமாக தன்னம்பிக்கை விளங்குகிறது.
மனித வாழ்வில் எத்தனையோ நிகழ்வுகள்,இகழ்வுகள் செயல்பாடுகள், முயற்ச்சிகள் நம் மீது வந்து மன உளைச்சலையும் தாக்கத்தையும் ஏற்ப்படுத்துகின்றன. இவைகள் அனைத்திற்கும் பலமானதொரு பாலமாக அமைந்து வெற்றிப்பாதையை அடையச்செய்வதே தன்னம்பிக்கை எனும் தாரகை மந்திரமாகும்.
எத்தனை சுமைகளானாலும் சுமப்பவன் தன்னபிக்கையோடு சுமந்தால் சுமை சுமையாக தெரியாது.ஏனென்றால் சுமந்தவன் சுமையை விட வலிமை குறைந்தவனே.! அப்படியானால் அங்கு தன்னம்பிக்கை நிலை நாட்டப்பட்டு இருக்கிறது என்று தான் சொல்ல முடியும்.
கால் வயிறு கஞ்சிக்காக கம்பி மீது நடப்பவன் கூட தன்னபிக்கை இல்லையெனில் அவன் மறுபகுதி வரை சென்றடைய முடியாது.
எத்தனையோ சாதனையாளர்கள், விஞ்ஞானிகள், மேதாதைகள் அனைவரும் புகழின் உச்சிக்கு சென்றது அவர்களின் அறிவுச்சிந்தனை ஒருபுறம் இருந்தாலும் அதனை செயல்படுத்த உதவியது .தன்னம்பிக்கையே ! எத்தனைமுறை தோற்றாலும் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயற்ச்சித்தால் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
நம்மீதே நமக்கு நம்பிக்கை இல்லாமல் செய்யும் எக்காரியமும் நலம் பெறாது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு தோற்றாலும் மீண்டும் முயற்சிக்கவே தோன்றும்.இறுதியில் என்றாவது ஒரு நாள் வெற்றி கிட்டும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.
1. தன்னம்பிக்கையின் முதல்படி நம் மீது முதலில் நாம் நம்பிக்கை கொள்ளல் வேண்டும்.
2. நாமும் சாதித்துக்காட்ட வேண்டுமென்ற எண்ணம் நம் உள் மனதில் ஆழமாக பதிந்து விட வேண்டும்.
3. எத்தனை தடைகளானாலும் அதை தடைக்கல்லாக நினைக்காமல் அத்தனையும் நம் முன்னேற்றத்தின் படிக்கல்லாக நினைத்து மனம் தளராது தன்னம்பிக்கை கொண்டு முயற்சித்தல் வேண்டும்.
4. எடுத்த காரியத்தில் ஏமாற்றமடைந்தாலும் என்றாவது ஒருநாள் வேன்றிடுவேனென்ற நம்பிக்கையில் உறுதியாக இருக்க வேண்டும்.
5. எச்சூழலிலும் அநீதிக்காக தன்னம்பிக்கை கொள்ளல் கூடாது. நம் வாழ்க்கைக்கு பயனுள்ள விஷயங்களுக்காக மட்டுமே இத்தகைய தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
தன்னம்பிக்கை அனைவரிடத்திலும் தலை தூக்கி விட்டால் நம்நாட்டின் வறுமையை கூட ஒழித்து விடலாம். தன்னம்பிக்கையுடன் செயல்படும் எக்காரியமும் தாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.
ஆகவே நாம் அனைவரும் சாதித்துவிடலாம், நம்மாலும் முடியும் என்று முயற்சியை முன் வைத்து தன்னம்பிக்கை கொள்வோம்! வெற்றியாளர்களாய் வளம் வருவோம் !
அதிரை மெய்சா
No comments:
Post a Comment