கருப்பை வாய் புற்றுநோய் இருப்பது மருத்துவ சோதனைகளில் கண்டறியப்பட்டால் அதன் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை துவக்கப்படும்.
கருப்பை வாய் புற்றுநோய்க்கு பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. அதில் அறுவை சிகிச்சை முறையும் ஒன்று. அந்த அறுவை சிகிச்சை முறையிலும் பல்வேறு வகைகள் உள்ளன.
கருப்பையின் கழுத்துப் பகுதியில் புற்றுநோய் பரவியிருக்கும் பட்சத்தில், கருப்பையின் கழுத்து, கருப்பை அல்லது புணர்புழையின் மேற்பகுதி நீக்கப்படும். இதற்கு ராடிகல் ஹிஸ்டேரேக்டோமி என்று பெயர். இதில் கருப்பை முழுமையாக அறுவை சிகிச்சை முறையில் அகற்றப்படும்.
ஆனால் கருப்பை அகற்றப்படாமல், வெறும் கருப்பை வாயின் கழுத்து மட்டும் நீக்கப்படுவதும் உண்டு. சாதாரணமாக இது செய்யப்படுவதில்லை. ஏன் எனில், கருப்பை செல்கள், கருப்பையின் வாய் பகுதியில் இருந்த மற்ற பகுதிகளுக்குப் பரவி எதிர்காலத்தில் பிரச்னையை ஏற்படுத்தலாம் என்பதால்.
புற்றுநோய் செல்களை எந்த அறுவை சிகிச்சையும் இன்றி, கதிர்வீச்சு சிகிச்சை மூலமாக அழிக்கும் சிகிச்சை முறையும் சிலருக்கு நல்ல பலனை தருகிறது.
புற்றுநோய்க்கு தற்போது வெகு பிரபலமாக அறியக் கூடிய சிகிச்சையாக கீமோதெரபி கூறப்படுகிறது. புற்றுநோயை அழிக்கக் கூடிய மருந்துகளின் தொகுப்பைத் தான் கீமோதெரபி என்கிறார்கள். ஆனால், இந்த கீமோதெரபி சிகிச்சை முறையை தாங்கும் உடல் அமைப்பு இருக்கும் பெண்களுக்கு மட்டுமே இது துவக்கப்படும்.
சில பெண்கள், கருப்பை வாய் புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்ற பிறகு குழந்தைப் பேறு அடைய விரும்புவார்கள். எனவே, அதற்கேற்ற வகையில் சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் தேர்வு செய்வார்கள்.
புற்றுநோயின் தன்மை, நோயாளியின் நிலை என பல்வேறு விஷயங்களை அடிப்படையாக வைத்தே சிகிச்சை முறை தேர்வு செய்யப்படுகிறது. ஹிஸ்டேரேக்டோமி போன்ற கருப்பை நீக்க அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை அல்லது சில கீமோதெரபி சிகிச்சைகளுக்குப் பிறகு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும்.
No comments:
Post a Comment