ஆண்டுதோறும் இந்தியாவில்50 லட்சம் பேர் பட்டம் பெற்று கல்லூரிகளை விட்டு வெளியேறுகின்றனர் என்று கூறுகிறது புள்ளிவிபரம் ஒன்று.
கம்ப்யூட்டர் அறிவு இல்லாதது, சரியான ஆங்கிலப் புலமையின்மை போன்ற காரணங்களால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேலை கிடைக்காமல் அவதிப்படுகிறார்களாம்.
படித்துப் பட்டம் பெற்று வெளியில் வந்தும் கூட புறச்சூழலுக்கு ஒவ்வாதவர்களாக வெறும் ஏட்டுச் சுரக்காய்களாக இவர்கள் இருப்பதால்தான் இந்த அவல நிலையாம். இந்தியா முழுவதும் இப்படிப்பட்ட காரணங்களால் வேலை கிடைக்காமல் தவிக்கும் பட்டதாரிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment