டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வி.சி.சுக்லா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவடா வனப்பகுதியில் கடந்த மாதம் 25-ந் தேதியன்று காங்கிரஸ் கட்சியினர் நடத்திய யாத்திரை மீது மாவோயிஸ்டுகள் மிகப் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தினர். இதில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான சல்வா ஜூதும் அமைப்பை உருவாக்கிய அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் மகேந்திர கர்மா உட்பட 28 பேர் பலியாகினர். மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வி.சி.சுக்லா உள்ளிட்ட 35 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த வி.சி.சுக்லா டெல்லி குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
மன்மோகன்சிங், மோடி, சோனியா இரங்கல்
வி.சி.சுக்லாவின் மறைவுக்கு பிரதமர் மன்மோகன்சிங், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment