டெல்லி: தமிழ்நாட்டில் ராஜ்யசபா எம்.பி தேர்தலில் 6 இடங்களையும் அதிமுகவே கைப்பற்றுமா கேள்வி எழுந்துள்ளது. அதற்கேற்ப கணக்குப் போட்டு கட்சிகள் காய் நகர்த்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவிற்கு தமிழகத்தில் இருந்து 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. அ.தி.மு.க. சார்பில் டாக்டர் மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், டி.ரத்தினவேல், டாக்டர் லட்சுமணன், எஸ்.சரவணபெருமாள் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.
ஒரு இடத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஜெயலலிதா ஒதுக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 இடங்களுக்கும் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு விட்டனர்.
தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 151 பேர் உள்ளனர். தலா 34 பேர் வீதம் 136 எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து டெல்லி மேல் சபைக்கு 4 எம்.பி.க்களை தேர்வு செய்து விடுவார்கள். இதன்பிறகு அ.தி.மு.க. வுக்கு 15 எம்.எல்.ஏ.க்கள் மீதம் இருப்பார்கள். அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் 5-வது வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டுமானால் மேலும் 19 ஓட்டுகள் தேவைப்படும்.
No comments:
Post a Comment