Latest News

வெங்காயம், தக்காளி ரூ.30... மலிவு விலை காய்கறி கடையை திறந்து வைத்தார் ஜெயலலிதா


சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 31 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளை முதல்வர் ஜெயலலிதா இன்று (20.6.2013) தலைமைச் செயலகத்தில் வீடியோ காண்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

 இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது:

 விவசாயிகளின் விளை நிலங்களிலிருந்தும், கூட்டுறவு சங்கங்களின் கொள்முதல் மையங்களிலிருந்தும் காய்கறிகள் நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து நேரிடையாக ஒவ்வொரு நாளும் கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளுக்கான தொகை அன்றைய தினமே சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களால் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதால் விவசாயிகள் இடைத்தரகர்களை நாடவேண்டிய சூழல் தவிர்க்கப்படுவதுடன் அவர்களுக்கு உரிய விலை உடனடியாக கிடைக்கவும் ஏதுவாகிறது.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் காய்கறிகள் அன்றைய அடக்க விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதால் நுகர்வோர்களும் பயனடைய உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் - தங்கம்பட்டி, மணியக்காரப்பட்டி, பழனி, சத்திரப்பட்டி; திருவள்ளூர் மாவட்டம் - ஆரணி; கிருஷ்ணகிரி மாவட்டம் - பாகலூர், பேரிகை; விழுப்புரம் மாவட்டம் - திண்டிவனம், வெள்ளிமலை; நாமக்கல் மாவட்டம் - கொல்லி மலை; நீலகிரி மாவட்டம் போன்ற காய்கறி அதிகமாக விளையும் பகுதிகளில் கூட்டுறவு சங்கங்கள் நேரடியாக காய்கறிகள் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் காய்கறிகள் சென்னை, தேனாம்பேட்டை காமதேனு கூட்டுறவு சிறப்பங்காடி வளாகத்தில் குளிர்பதன அறையில் பாதுகாக்கப்படுகிறது.

பல்வேறு பகுதிகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் காய்கறிகள் சென்னை மாநகரில் தேனாம்பேட்டை, இராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ராஜா அண்ணாமலைபுரம், வேளச்சேரி, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம், பெரியார் நகர், கண்ணம்மா பேட்டை மற்றும் துரைப்பாக்கம் ஆகிய 11 இடங்களிலுள்ள டி.யு.சி.எஸ். விற்பனை நிலையங்களிலும்; அண்ணா நகர், வில்லிவாக்கம் மற்றும் ஷெனாய் நகர் ஆகிய

3 இடங்களிலுள்ள பூங்கா நகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கடைகளிலும்;

தாம்பரம் கிழக்கு, குரோம்பேட்டை, போரூர், பல்லாவரம் மற்றும் ஆலந்தூர் ஆகிய 5 இடங்களிலுள்ள காஞ்சிபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கடைகளிலும்; மாத்தூர் மற்றும் ஆர்.வி. நகர் ஆகிய 2 இடங்களிலுள்ள வட சென்னை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கடைகளிலும்; அடையார் மற்றும் வண்ணாரப்பேட்டை ஆகிய 2 இடங்களிலுள்ள தொடக்க கூட்டுறவு பண்டகசாலை கடைகளிலும்; அண்ணா நகர், நந்தனம், கீழ்ப்பாக்கம், கோபாலபுரம், இந்திரா நகர் மற்றும் சூளைமேடு ஆகிய 6 இடங்களிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கடைகளிலும் என மொத்தம் 29 கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், மயிலாப்பூர் மற்றும் கோயம்பேடு ஆகிய இடங்களில் டி.யு.சி.எஸ். நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 2 நடமாடும் கடைகள் மூலமாகவும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

கூட்டுறவு சங்கங்களால் விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்படும் உருளைக் கிழங்கு, வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், முட்டைக்கோசு, பீன்ஸ், கேரட், பீட்ரூட், முருங்கை, பச்சை மிளகாய், தேங்காய், வாழைக்காய் போன்ற 31 வகையான காய்கறிகள் வெளி அங்காடி விலையைவிடக் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. இணைப்பில் தரப்பட்டுள்ள பட்டியல் இந்த பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் விற்கப்படும் காய்கறிகளின் இன்றைய விற்பனை விலை அட்டவணையிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

காய்கறி விலை உயர்வினை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகர் மற்றும் புறநகரில் அமைக்கப்பட்டுள்ள 31 பண்ணைப் பசுமை காய்கறி நுகர்வோர் கடைகளை முதல்வர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் விற்கப்படும் காய்கறிகளின் விலைப்பட்டியல்:

பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் விற்கப்படும் காய்கறிகளின் விலைப்பட்டியல்: பெரிய வெங்காயம் ரூ.20 சாம்பார் வெங்காயம்ரூ.60  தக்காளி (நவீன்)  ரூ.30 தக்காளி (நாடு) ரூ.30  உருளைக்கிழங்க ரூ.20 கேரட் ரூ.40  பீன்ஸ்  ரூ.50 முட்டைக்கோஸ் ரூ.18  சவ்சவ் ரூ.25 கத்தரிக்காய் (டிஸ்கோ) ரூ.20  முள்ளங்கி ரூ.16 இஞ்சி ரூ.140  தேங்காய் (ஒன்று) ரூ.8 புடலங்காய் ரூ.25  எலுமிச்சை (ஒன்று) ரூ.1.50 வெண்டைக்காய் ரூ.24  முருங்கைக்காய்  ரூ.30  அவரைக்காய் ரூ.40  வாழைக்காய் (ஒன்று) ரூ.5 பீட்ரூட் ரூ.20  காலிஃபிளவர்  ரூ.15 நூல்கோல  ரூ.15  கொத்தமல்லி (1 கட்டு)  ரூ.15 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.