'உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
உள்ளத்தை பார்ப்பவன் இறைவனடா'
உள்ளத்தை பார்ப்பவன் இறைவனடா'
என்ற பாடலின் வரியே இந்த வார ஆக்கத்தின் ஆய்வாய் ஆராய்வோம். சிறு வயதில் நீதி போதனையாய் கேட்ட ஒரு கதையை இங்கு பதிய விரும்புகிறேன்.
ஒரு ஊரில் பஞ்சம் தலை விரித்தாடியது. உணவுக்கு பஞ்சம் பல மக்கள் ஊரைவிட்டு வெளியேறிய வண்ணம் இருந்தனர். அதில் ஒருவர் ஊருக்கு வெளியே மணல் மேடுகளைக் கண்டு அடடா... இவை அனைத்தும் தானியங்கள் ஆகவோ அல்லது ரொட்டி சுடும் மாவாகவோ இருந்து அது எனக்கு சொந்தமாக இருந்தால் ! இவ்வூரில் கஷ்டப்படும் மக்களுக்கு கொடுத்து உதவுவேனே என்று உள்ளத்தால் நினைத்தானாம்.
உள்ளத்தை அறிந்த இறைவன் அந்த மணல் மேடு அளவு தானியங்கள் தருமம் செய்த நன்மையை அம்மனிதனுக்கு கிடைக்க அதாவது நன்மை செய்ததாக பதிந்திட ஆணையிட்டான் என்று பாட்டி மூலம் காது குளிர கேட்டேன்.
உள்ளத்தூய்மை இறைவனுக்கு உகந்த ஒன்று.
உள்ளத்தை பார்க்கும் மனிதன்
மனிதனில் புனிதன்
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
ஒரு முறை முல்லா நசுருதீன் விருந்திற்கு அழைக்கபட்டார். தூய்மையான உடை அணியாமல் செல்ல விருந்திற்கு அனுமதிக்க வில்லை. நிலைமையை அறிந்த முல்லா வீட்டிற்கு சென்று நேர்த்தியான உடை அணிந்து மீண்டும் விருந்திற்கு செல்ல உள்ளே அனுமதிக்க பட்டார். விருந்து பரிமாறப்பட்டது எல்லோரும் முல்லாவை வினோதமாக பார்த்தார்கள்.
அப்படி என்ன செய்தார் முல்லா !?
கொடுக்கப்பட்ட சுவையான உணவுகளை தனது உடையில் அள்ளி தேய்த்து கொண்டாராம் ஏன் இப்படி என கேட்க ? விருந்து எனக்கல்ல எனது உடைக்கு தான் என்றாராம் புரிகிறதா !?
உள்ளத்தை பார்க்காமல் உருவத்தை பார்க்கும் உலகம் ! உருவத்தால் வசீகரம் நாகரிக உலக நடைமுறைக்கேற்ப தன்னை அலங்கரித்து உலகில் வளம் வருபவர்களுக்கு இக்கால மனிதர்கள் தரும் மரியாதை. சாதாரணமாக உலகில் எளிமையாக வளம் வருபவர்களுக்கு கிடைப்பதில்லை ..
உருவத்தை வைத்து மனிதர்கள் தரும் மரியாதை பற்றிய உளவியல் பார்வையை பாப்போம்...
சிறு வயதில் பிள்ளைகளுக்கு உடை விசயத்தில் அதிகம் கவனம் செலுத்துங்கள் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு சீருடை அணிவித்து அனுப்பும் பெற்றோர் கசங்கிய நிலையில் உள்ள ஆடைகளை அணிவித்து அனுப்புவர் அது பிள்ளைகளின் மனதில் ஏனோ தானோ என்ற மன நிலை உண்டாகும் ! பிறர் நம்மை பற்றிய எண்ணம் எப்படி இருக்கும் என்பதை அறிய வாய்ப்பில்லை. ஐந்தாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளிடம் தமது உடைகளை நேர்த்தியாக மடித்து வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
உடை நறுமணம் வீசும் அளவிற்கு பிள்ளைகளின் உடையை சுத்தமாக சலவை செய்து கொடுக்க வேண்டும். அக்குழந்தைகளிடம் ஆசிரியர்களின் அணுகுமுறையும் நன்றாக் இருக்கும். பிறரை கவர வைக்கும் பிறர் தம்மை மதிக்க தோற்றம் முக்கியம்.
* பிறர் நம்மை பார்த்து புன்முறுவல் பூப்பதும். பாராமுகமாக இருப்பதும் நமது உருவத்தின் அடிப்படையில்தான்.
* பிறர் நம்மிடம் அணுகும் போது புன்முறுவல் பூத்து முகமன் கூறுதல் நலம் விசாரித்தல் மூலம் பிறர் மனம் கவரலாம்.
* பிறர் நமக்கு தரும் நன் மதிப்பை வைத்தே நமக்குள் தன்னம்பிக்கை ஏற்படும்.
* இயற்கையான முக வசீகரம் இறைவன் தந்த அருட்கொடை. அதற்காக இறைவனுடன் நன்றி பாராட்டலாம். ஆனால் பிறரை நகைப்பது, பிறர் குறை கூறித்திரிவது தனது அழகினால் இறுமாப்பு கொள்வதால் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். திமிர் பிடித்தவன் கர்வம் கொண்டவன் என்ற பெயர் கிடைத்து விட்டால் நல்ல வாய்ப்புகள் வரும்போது கர்வம் பிடித்தவன் அவனுக்கு ஏன் உதவ வேண்டும் என எண்ணுவர்.
* பிறரை மதித்து நாமும் உயரலாம்.
உள்ளத்தை தூய்மையாய் வைத்து மனிதரில் புனிதராய் ஆக முயற்சிப்போம். தூய்மையான உள்ளத்திற்கு மதிப்பளித்து மனிதரில் புனிதராவோம் !
இன்னும் வளரும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
No comments:
Post a Comment