இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஸஹ்ரா ஷாஹித் ஹுசைன் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த 11ம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து, நவாஸ் பிரதமராக பதவியேற்க உள்ளார். ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தாரிக் இ இன்சாப் கட்சி தேர்தலில் 2வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தத் தேர்தலில் கராச்சி தொகுதி ஒன்றில் வாக்குப்பதிவு முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அங்கு மறு வாக்குப்பதிவு நடக்கவிருந்ததற்கு சில மணி நேரங்கள் முன்பாக அவ்வூரில் உள்ள தனது வீட்டின் முன்பாக வைத்து ஸஹ்ரா சுடப்பட்டிருந்தார். இந்த சம்பவத்துக்கு முகைதா குவாமி அமைப்பின் தலைவர் அல்டாப் ஹுசைன் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இம்ரான்கான், லண்டனில் உள்ள அல்தாஃப் ஹுசைன் வன்முறையைத் தூண்டும் விதமாக கருத்து தெரிவித்துள்ள்தற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

No comments:
Post a Comment