சென்னை: சென்னையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த என்ஜீனியரீங் மாணவரான சாய்கணேஷின் உடல் உறுப்புகளை உதவி வேண்டி வாழும் 7 நோயாளிகளுக்கு பொருத்த அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் சாய்கணேஷ் (20). இவர் தாம்பரம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
சில தினங்களுக்கு முன்பு சாய்கணேஷ் மோட்டார் சைக்கிள் விபத்தில், தலையில் பலத்த காயம் அடைந்தார். சாய்க்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மூளைச்சாவு ஏற்பட்டது. இதனை டாக்டர்கள் நேற்று இரவு உறுதி செய்தனர்.
மகனின் இழப்பு மனதில் கனத்தாலும், உடனடியாக சாயின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன் வந்தனர். பெற்றோரின் சம்மதத்தின் பேரில், சாய்கணேசின் இதயம், சிறுநீரகங்கள், கண்கள் உள்பட 7 உறுப்புகளை டாக்டர்கள் ஆபரேசன் மூலம் பிரித்தெடுத்தனர்.
பின் உடனடியாக அந்த உறுப்புகள், தேவையில் இருந்த 7 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. இதன் மூலம் அவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டது. இது குறித்து அவரின் பெற்றோர் கூறியதாவது, ‘சாய்கணேசுக்கு இன்று 21-வது பிறந்த நாள். பிறந்த நாள் இறந்த நாளாக மாறி அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருக்கிறது. சாய்கணேஷ் எங்களோடு இல்லாவிட்டாலும் 7 பேர் வடிவத்தில் நடமாடுகிறான் ' என அவரது தந்தை கிருஷ்ண மூர்த்தி, தாய் ராஜலெட்சுமி ஆகியோர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
No comments:
Post a Comment