சென்னை: பிளஸ்டூ தேர்வு முடிவுகளை இன்று காலை 10 மணிக்கு தமிழக அரசின் கல்வித்துறை வெளியிடுகிறது. அரசின் நான்கு இணையதளங்கள் மூலம் இந்த முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள பல்வேறு வகையான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர் அலுவலகங்களில் இங்கும் என்ஐசி எனப்படும் தேசிய தகவல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களில் உள்ள இன்டர்நெட் வசதியைப் பயன்படுத்தி முடிவுகளை கட்டணம் இல்லாமல் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் தங்களது பள்ளிகளிலும் முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முடிவுகள் வெளியாகும் அரசின் இணையதளங்கள்...
http://tnresults.nic.in http://
dge1.tn.nic.in http://
dge2.tn.nic.in http://
dge3.tn.nic.in
தில் http://dge3.tn.nic.in என்ற இணைய தளம் GPRS/WAP வசதியுடன் கூடிய செல்போனிலும் தேர்வு முடிவுகள் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மின் தடை விலக்கு
மிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு மார்ச் மாதம் 1-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி முடிவடைந்தது. 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவ, மாணவியர் தேர்வு எழுதி இருக்கிறார்கள். விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 26-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ந் தேதி வரை நடைபெற்றது.
இதற்கிடையே இன்று +2 தேர்வு முடிவுகளை முன்னிட்டு இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலை பள்ளிகளுக்கும் மின் தடையில் இருந்து விலக்கு என சட்ட சபையில் தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment