இன்று [ 16-03-2013 ] சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் பதினோறாவதுக் கூட்டத்திற்கு AAMF'ன் தலைவர் M.M.S. சேக் நசுருதீன் அவர்களின் தலைமையிலும், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்களோடு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட AAMF'ன் ஒருங்கிணைப்பாளர் M.S. ஷிஹாப்தீன், ஷம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் உமர், அதிரை பேரூராட்சி தலைவர் S.H. அஸ்லம், K.S. அப்துல் ரஹ்மான், கீழத்தெரு மஹல்லாவின் அமீரகத் தலைவர் அப்துல் ஜலீல், B. ஜமாலுதீன் ஆகியோருடன் அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் ஏனைய நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்களிப்புடன் இனிதே துவங்கியது.
1. கிராஅத் : அஹமது கபீர் அவர்கள்
2. வரவேற்புரை : MMS. சேக் நசுருதீன் அவர்கள்
3. கடந்த [ 22-01-2013 ] அன்று ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் சிறப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்களால் விளக்கப்பட்டது.
4. AAMF'ன் சார்பாக அதிரையில் இலவச மருத்துவ முகாம் நடத்துவது என்று ஆலோசிக்கபட்டன. மற்ற அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மருத்துவ முகாம்ங்கள் நமதூரில் நடந்து வருவதாக ஒரு சில உறுப்பினர்களிடேயே மாற்றுக்கருத்து ஏற்பட்டதால் அதற்கு மாறாக மாணவர்கள் பயனுறும் வகையில் வருகின்ற கோடைகால விடுமுறை தினங்களில் அதிரையில் கல்வி விழிப்புணர்வு முகாம் நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டன.
5. AAMF'ன் அமீரக கிளை மற்றும் தரகர் தெரு அமீர நிர்வாகிகளின் சார்பாக அனுப்பட்ட கடிதங்கள் இந்தக்கூட்டத்தில் வாசித்துக் காண்பிக்கப்பட்டது. இதுகுறித்து புதிதாக கூட்டத்தில் கலந்து கொண்ட தரகர்தெருவின் புதிய நிர்வாகிகளிடமிருந்து கருத்து பெறப்பட்டுள்ளது.
6. கடந்த ஆண்டு சகோ. M. சேக்தாவுது [ நெசவுத்தெரு ] அவர்களின் சார்பாக சித்திக் பள்ளி – பாதை அடைப்பு தொடர்பாக AAMF'க்கு கொடுக்கப்பட்ட மனுவின் முடிவு குறித்து விளக்கம் கோரியதையடுத்து, அவற்றை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு ஆலோசிக்கபட்டன. இறுதியில் வருகின்ற [ 31-03-2013 ] அன்று ஞாயிறு காலை 10 மணியளவில் நமதூர் பெரிய ஜூம்ஆ பள்ளியில் சித்திக்பள்ளியின் தலைமை நிர்வாகிகளை அழைத்து அவர்களின் கருத்தை பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் சார்பாக அழைப்பிதழ் அவர்களுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
தகவல் தொடர்பாளர்
AAMF – அதிரை
குறிப்பு : அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது மஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் நடத்துவது எனவும், அதன்படி அடுத்தக் கூட்டமாக "கடற்கரைத்தெரு மஹல்லாவில்" நடைபெறும் [ இன்ஷா அல்லாஹ் ! ] இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.
நன்றி : அதிரைநியூஸ்

No comments:
Post a Comment