வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பின் [ ATCO ] சார்பாக அதிரையில் மாபெரும் பொருட்காட்சி வருகின்ற 28-04-2013 முதல் 12-05-2013 வரை நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
அதிரையில் வரலாற்றில் முதன் முறையாக அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய மக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக பயன்பாடுகளை மையமாக வைத்து நடைபெற உள்ள இந்த மாபெரும் பொருட்காட்சி மூலம் நமதூர் மக்களிடையே புரிந்துணர்வும், பெண்களுக்கு பாதுகாப்பானதாகவும், வர்த்தக மேம்பாடு பெறுவதாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக பொருட்காட்சியில் பங்குகொள்ள இருக்கின்ற வர்த்தக நிறுவனங்களிடேயே அரங்குகள் முன் பதிவு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment