கடும் மின் பற்றாக்குறை காரணமாக அதிரையில் மின் வெட்டு நேரம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் கடந்த சில நாட்களில் மட்டும் 16 மணி நேரமாக இருந்து வருவது வேதனையாக உள்ளது.
முக்கிய நேரங்களில் அமலாக்கப்படும் மின் வெட்டால் பொதுமக்கள் மாத்திரமல்ல ஆண்டு இறுதித்தேர்வு எழுதும் / எழுத தயாராகும் மாணவ, மாணவிகள் மிகவும் அவதியுறும் நிலை ஏற்பட்டு உள்ளன. இதனால் அதிரையில் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதோடு பொது மக்களின் அன்றாட பணிகளும் முடங்கிப் போயுள்ளன.
கடற்கரைத்தெருவில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் விநியோகத்தில் தடங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். இதையடுத்து கடற்கரைத்தெரு ஜமாத்தினர் அதிரை பேரூராட்சித் தலைவர் SH. அஸ்லம், துணைத்தலைவர் பிச்சை, வார்டு உறுப்பினர் KSA. சாகுல் ஹமீத் ஆகியோரை அழைத்து இந்தப் பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை சீராக வழங்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment