வாகன ஓட்டுனர்களின் நன்மைக்காகவே புதிய கருவியொன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை வாகனங்களில் பொருத்திவிட்டால், வாகனங்களை ஓட்டும்பொழுது செல்போனை பயன்படுத்த முடியாதாம். குறுஞ்செய்தி போன்றவற்றையும் அனுப்ப முடியாது.
இதன் மூலமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கில் நடக்கும் விபத்துக்களை எளிதில் தடுக்கலாம் என இந்த சிறப்புக் கருவியை வடிவமைத்த அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கருவிக்கு ORIGO சேப் என பெயரிட்டுள்ளார்கள்.
இது காரில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் தற்பொழுது உருவாக்கியுள்ளோம். விரைவில் மற்ற வாகனங்களில் பயன்படுத்தவும் முயற்சி செய்வோம் எனவும் தெரிவித்துள்ளது இந்நிறுவனம்.

No comments:
Post a Comment