Latest News

[ 2 ] உள்ளம் கேட்குமே !? MORE…!


உள்ளம் கேட்குமே MORE ! என்ற தலைப்பில் எழுத ஆரம்பிக்கும்போது எனது மனதில் ஓடும் ஓட்டங்களில் அடிப்படையில் எழுதவே ஆசைபட்டேன் அதுவே ஆரோக்கியம் ! காரணம் பல்வேறு தரப்பு புத்தகங்களின் தொகுப்பாக ஒரு படைப்பு இருத்தல் கூடாது. அது எந்த தகவலையும் தந்து விடாது ஒரு கட்டுரையாளர் அல்லது ஆய்வாளர் தனது கருத்தினை பதிகின்ற போது ஒரு துளி தகவலாவது கல்வியாளர் மத்தியில் போய்சேரும் என்பதே எனது கருத்து இதே கருத்தை அன்புடன் புகாரி அவர்கள் ஒரு ஆக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார் அதுவே சரி பல அறிஞர்கள் பெயரை கூறி அவர் கூறும் கருத்தை பதிவது அவர்களை நினைவு கூறும் விதமாக அமையுமே தவிர நாம் என்ன சொல்ல வந்தோம் என்பதே இல்லாமல் போகும் இருப்பினும் நாம் ஆக்கம் எழுதுவதற்கு ஏற்ற கருத்துகள் உள்வாங்கி கொள்வதில் தவறில்லை.

உளவியல் என்பது மனிதர்கள் மத்தியில் அன்றாட செயல்பாடே அதில் குறிப்பிட்ட சில விசயங்களைப் பற்றி ஆராய்வோம் .உள்ளம் என்றால் என்ன என்று கேட்டிருந்தேன் அதற்கு திண்டுக்கல் தனபாலன் அவர்கள் அரூபம் என்றார்... KMA.  ஜமால் முஹம்மது அவர்கள் மனசு புத்தி என்றார்... ஆனால் அவைகள் உள்ளத்தை அழைக்கும் வேறு பெயர்கள் அது என்ன என்பதை சரியாக விளக்கினார் கவியன்பர் அபுல் கலாம் அவர்கள் எனவே உள்ளம் என்றால் நாம் பார்க்கும் கேட்கும் விசயங்களை கிரகிக்கும் மூளையின் ஒரு பகுதியே... அதன் செயல்பாடுகளே உள்ளம் ! அந்த உள்ளத்தில் பதியும் விசயங்கள் நல்லவையாக் அமைய இருக்கும் சூழல் முக்கியம் சிறு வயதில் பிள்ளைகளுக்கு தாய் சொல்லி கொடுக்கும் விசயமே உள்ளத்தில் பதியும் ! பசுமரத்து ஆணி போல பதியும் எனவே நல்ல விசயங்களை கற்றுக் கொடுப்பதில் ஆர்வம் செலுத்த வேண்டும். 

இது வரை எழுதிய விசயங்களுக்கும் உள்ளம் கேட்குமே MORE  என்ற தலைப்பிற்கும் சம்பந்தமே இல்லை.
இனி விசயத்திற்கு வருகிறேன்...

உள்ளம் எதுவெல்லாம் கேட்கும் MORE...?

பொதுவாக சிறு குழந்தைகள் பாசம் என்ற ஒன்றை மட்டுமே எதிர்நோக்கி காத்திருக்கும் ஆனால் நம்மவர்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாத வயதில்குழந்தைகளிடம்  பாசத்தை அள்ளி கொடுப்பார்கள். ஆனால் பாசங்களை எதிர்பார்க்கும் ஐந்து வயது முதல் பதினைந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பாசம் என்ற ஊட்டம் கிடைக்காமல் தடுமாறும் நிலை எப்படி ? பள்ளிக்கூடம் சென்றால் அங்கு ஆசானின் அறிவுரை ! வீட்டிற்கு  வந்தால் பெற்றோர் பள்ளிக்கூடப் பாடங்கள் பற்றிய கேள்வி இவைகளால் பிள்ளைகள் மத்தியில் மனச்சோர்வு ஏற்படும். அந்த சிறு உள்ளம் யாராவது அன்பு காட்டினால் அவர்களிடம்  இன்னும் இன்னும் என கேட்கும்...

கூட்டு குடும்பங்கள் இருக்கும் வீடுகளில் பெற்றோர் கண்டிப்புடன் நடந்து கொண்டால் பாட்டி போன்றோரின் அரவணைப்பு இருக்கும் ஆனால் இன்றைய கால கட்டத்தில் தனி குடும்பம் என்று பிரியும் சூழல் இயந்திர வாழ்க்கை உள்ளசோர்வு என்பது பெரியவர் முதல் சிறுவர் வரை உள்ளது அந்த உள்ளம் கேட்கும் அன்பு பாசம் MORE MORE... என்று பெரியவர்கள் சிறார்களுக்கு அன்பு காட்டி மகிழலாம் சிறுவர்களும் மகிழ்வர் பிள்ளைகளிடம் முற்றிலும் கல்வி பற்றியே கேட்டு போரடித்து விடாதீர்கள். உங்கள் விடுமுறை நாட்கள் மகனுக்கும் விடுமுறையே மகிழுங்கள்.
இன்னும்  வளரும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
நன்றி : சமூக விழிப்புணர்வு பக்கங்கள் 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.