நெல்லை: நெல்லையில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 13 வயது மகளை பெற்ற தாயே விபச்சாரத்தில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த ஒரு கார் டிரைவரின் மனைவி தான் தனது மகளையை அந்த படுகுழியில் தள்ளியுள்ளார். தனது கணவரின் உறவினர்கள் அனைவரும் நல்ல வசதியுடன் இருப்பதைப் பார்த்து தானும் அவ்வாறு ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு விபச்சார தொழிலை தேர்ந்தெடுத்துள்ளார்.
அவருக்கு பலர் நிரந்தர வாடிக்கையாளர்களாகினர். கணவர் வெளியூர் செல்லும் நேரத்தில் வீட்டுக்கே சில வாடிக்கையாளர்களை வரவழைத்து உல்லாச விருந்து படைத்துள்ளார். அப்படி ஒரு முறை வாலிபரர் ஒருவருடன் உல்லாசமாக இருக்கும் போது அவருடைய 13 வயது மகள் பார்த்துவிட்டாள்.
மகள் பார்த்ததை அந்த பெண்ணும் பார்த்து விடவே, எதைப்பற்றியும் யோசிக்காமல் மகளின் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு விபச்சார தொழிலில் இறக்கிவிட்டுவிட்டார்.
பள்ளி மாணவியாக இருந்தாலும் நல்ல நிறத்துடன் பார்க்க அழகாகவும், எடுப்பாகவும் மாணவி இருந்ததால் தொழிலதிபர்கள், பணக்கார வீட்டு மாணவர்களிடம் மகளை அனுப்பி அதிக பணம் சம்பாதித்தார் அந்த பெண். கடந்த 5 மாதங்களாக அந்த மாணவி பள்ளிக்கூடம் செல்லாமல் விபசார தொழிலில் பிசியாகிவிட்டார்.
இந்த நிலையில் பாளையம்கோட்டையில் உள்ள ஒரு பிரபலமான லாட்ஜில் நேற்று ஒரு தொழில் அதிபர் வந்து தங்கினார். அவரைப் பார்க்கப் போவது போல போன கார் டிரைவரின் மனைவியும் அவரது மகளும் வேலை விசயமாக தொழில் அதிபரை சந்திக்க வந்ததாக லாட்ஜ் ஊழியர்களிடம் கூறியுள்ளனர். அறைக்கு சென்ற சிறிது நேரத்தில் மகளை மட்டும் விட்டுவிட்டு அவரது தாய் வெளியே சென்று விட்டார்.
இது லாட்ஜ் ஊழியர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் அந்த லாட்ஜூக்கு விரைந்து சென்று அந்த அறையை அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 50 வயது மதிக்கத்தக்க தொழிலதிபர் அந்த 13 வயது மாணவியுடன் உல்லாசம் அனுபவித்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன.
8ம் வகுப்பு படிக்கும் தன்னை தனது தாயாரே இந்த தொழிலில் தள்ளிவிட்டுவிட்டார் என்று அழுதபடி கூறினார். இது தவறு இல்லையா என்று போலீசார் கேட்டதற்கு, "அம்மாவே இப்படி இரு என்று கூறும் போது நான் என்ன செய்ய முடியும் சார்" என்று மிகவும் வெகுளித்தனமாக கூறியுள்ளார். உடனடியாக போலீசார் அவரது தாயை வரவழைத்து விசாரணை நடத்தினார்கள்
. மாணவர்கள் படையெடுப்பு
அப்போது அந்த மாணவி, தன் தாயின் கையில் இருந்த செல்போனை பிடுங்கி, "சார் இந்த போனில் உள்ள எந்த எண்ணுக்கு போன் போட்டாலும் உடனே யாராவது வருவார்கள் சார்" என்று போலீசாரிடம் தெரிவித்தார். உடனே போலீசாரும் அந்த செல்போனை வாங்கி, 2 எண்ணுக்கு பெண் போலீஸ் மூலம் பேசினர்.
சிக்கிய மாணவர்கள்
உடனே எதிர்முனையில் பேசியவர்களை கேட்டு போலீசாருக்கு மயக்கம் வராத குறைதான். பாலிடெக்னிக் படிக்கும் மாணவரும் 11ம் வகுப்பு மாணவர் ஒருவரும் உடனடியாக லாட்ஜ்க்கு வந்தனர். அவர்களை பிடித்து விசாரிக்கவே, அவர்கள் ஏற்கனவே மாணவியுடன் உல்லாசமாக இருந்தவர்கள் என்று தெரிவித்தனர். இதனையடுத்து அந்த 2 மாணவர்களையும் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.
குடும்ப பெண்கள் உல்லாசம் அந்த செல்போனில் உள்ள மேலும் சில எண்களுக்கு போன் செய்தபோது பாளையங்கோட்டையை சேர்ந்த 3 குடும்ப பெண்கள் பேசினர். அவர்களும் உடனே லாட்ஜூக்கு வந்துவிட்டனர்.
குடிக்க ஆரம்பித்த தந்தை
மாணவியின் தந்தையை போலீசார் அழைக்கவே குடிபோதையில் வந்த அவர், இதனால்தான் நான் குடிக்கவே ஆரம்பித்தேன்" என்று போலீசாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து போலீஸ் நிலையத்திற்கு வந்த அந்த சிறுமியின் உறவினர்கள், சிறு வயதில் அந்த மாணவிக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது. பல லட்சம் செலவு செய்து சரிசெய்தோம். அந்த பிஞ்சு குழந்தையை இப்படி நாசமாக்கி விட்டார்களே" என்று கண்கலங்கினர். இனியும் பெற்றோரிடம் விட்டு வைக்க வேண்டாம், நாங்கள் அழைத்து சென்று படிக்க வைத்துக்கொள்கிறோம் என்று கூறினர். இதனால் மனிதாபிமான அடிப்படையில் அந்த மாணவியை கார் டிரைவரின் உறவினர்களுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். செல்போனில் அழைத்தவுடன் ஓடி வந்த பாளையை சேர்ந்த பெண்கள் மீதும் இந்த தொழிலில் புரோக்கராக செயல்பட்ட குமார் (40) என்பவன் மீதும் பாளை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு குடும்பப் பெண்கள், கல்லூரி மாணவிகள், விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் சம்பவம் சென்னை போன்ற
பெருநகரங்களில்தான் அதிகம் இருந்தது. இப்போது நெல்லையிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது காவல்துறை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : tamil.oneindia.in
No comments:
Post a Comment