அதிரை தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி மேலத்தெரு. இந்த பகுதியில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை முழுமையாக தவிர்க்கும் பொருட்டு நபார்டு திட்டத்தின் கீழ் 2008-2009 ஆம் ஆண்டிற்கான நிதி ரூபாய் 6 லட்சம் ஒதுக்கீட்டில் பெண்கள் பயன்படுத்தும் வகையில் நவீன வசதியில் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த வளாகம் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பெண்கள் பயன்படுத்தும் நோக்கில் திறக்கப்படாமல் இருப்பது இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அதிர்ச்சியளிப்பதோடு மட்டுமல்லாமல் பாழடைந்து காணப்படுகின்றன.
இந்த சுகாதார வளாகத்தை அதிரை பேரூராட்சி நிர்வாகம் விரைந்து திறப்பதற்குரிய முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.
அதிரை பேரூராட்சி இந்த கழிவரை விசையத்தில் செவி மடுக்குமா என்றும் பொருத்திருந்து பார்ப்போம். 6 ஆண்டுகலமாக பாழடைந்து போய் கொண்டுயிருக்கும் கழிவரையை அதிரை பேரூராட்சி நிர்வாகம் விரைந்து திறப்பதற்குரிய முயற்சியில் ஈடுபட வேண்டும்.2008, 2009 ஆம் ஆண்டிற்கான நிதியில் 6 லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட கட்டிடம், இன்றுவரை திறந்து வைக்காத காரணம் தான் என்ன...? இதற்க்கு பேரூராட்சி விளக்கம் தருமா?
ReplyDelete