ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் வசிக்கும் தமிழர்களின் பேரமைப்பாகத் திகழும் அய்மான் சங்கம் நடத்திய கல்வி பொருளாதார பேம்பாட்டு கருத்தரங்கம் அரப் உடுப்பி பெண்குயிண்ட் அரங்கில் வியாழன் மாலை சிறப்பாக நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் தலைமை வகித்தார். நோபிள் மரைன் குழுமங்களின் நிர்வாக இயக்குனர்.ஷாஹுல் ஹமீத் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் துவக்கமாக லால்பேட்டை ஹாபிழ்.இர்ஷாத் அஹமத் இறைமறை வசனங்கள் ஓதினார்.அய்மான் சங்க பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
உணர்வாய் உன்னை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தஞ்சை ஜலால்,அபுதாபி தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.ரெஜினால்டு,கவிஞர் கூறியூர் குத்புத்தீன் ஐபக்,துபை ஈமான் செயலாளர் முஹையத்தீன் அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தமிழக கல்வி,சமூக பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவர் எஸ்.எம்.ஹிதாயத்துல்லாஹ் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து சமுதாய மேம்பாடு,பொருளாதார முன்னேற்றம் குறித்து சிறப்பாக விவரித்தார். அமீரகம் வந்திருந்த நாஞ்சில் சம்பத் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை,கீழக்கரை,காயல்பட்டிணம்,லால்பேட்டை,அதிராம்பட்டிணம்,ஆடுதுறை, நீடூர்,திருவாடுதுறை, நெல்லை,வி.களத்தூர்,தேவிப்பட்டிணம்,அழகன்குளம்,கொள்ளுமேடு,மானியம் ஆடூர்,களமருதூர்,ரெட்டியூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் ஜமாஅத் பிரதிநிதிகள், இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இறுதியாக அய்மான் சங்க செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார்
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அய்மான் சங்க நிர்வாகிகள் களமருதூர் ஷர்ஃபுத்தீன்,திருவாடுதுறை அன்சாரி பாஷா,மானியம் ஆடூர் குத்புத்தீன் ஹாஜியார்,யூஸுஃப் பக்ஷ்,முஹம்மது ஹாரிஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
தகவல்: வி.களத்தூர் ஷா
No comments:
Post a Comment