ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் “பாரதி நட்புக்காக்” என்ற தமிழ் அமைப்பின் சார்பில் தமிழர் திருநாள் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அபுதாபியில் சிறப்பாக செயல்பட்டுவரும் தமிழ் அமைப்பான “பாரதி நட்புக்காக“ என்ற அமைப்பு அவ்வப்போத நிகழ்ச்சிகள் அமைத்து தமிழர்களை மகிழ்வித்துவருகிறது. அந்த வரிசையில் இந்த வருடமும் தமிழர் திருநாள் நிகழ்ச்சியை கடந்த வெள்ளிக்கிழமை அபுதாபி இந்தியன் பள்ளியில் நடத்தியது.
அமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அபுதாபி நடனக் கலை ஆசிரியர் ஆஷா நாயர் மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து "இன்றைய வாழ்க்கை முறை மகிழ்ச்சியானது என்பது குற்றம்““ என்ற வழக்காடு மன்றம் , ,அதிமுகவின் துணை கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தலைமையில் பேராசிரியர் பு.சி.கணேசன் மற்றும் பேராசிரியர் முகம்மது ரபீக் ஆகியோர் வழக்காடு மன்றத்தில் கலந்த கொண்டு வழக்காடினர். இலக்கியத்துடன் கூடிய இவ்வழக்காடு மன்றம் அபுதாபி மக்களுக்கு நல்விருந்தளித்தாயமைந்தது.
விழாவிற்கு அணுசரனை வழங்கிய புரவலர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
தகவல்: அபுதாபியிலிருந்து கமால் பாஷா
No comments:
Post a Comment