இன்று [ 24-02-2013 ] தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் துவங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் சொட்டு மருந்துகள் வழங்கப்பட வேண்டும். இவற்றின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அதிரை நகரில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டனர் காதிர் முகைதீன் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள்.
முன்னதாக பேரணியை துவக்கி வைத்தார் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியை ஷஃபிரா பேகம், பேராசிரியர் கா. செய்யது அஹமது கபீர், முனைவர் O. சாதிக், பேராசிரியர் மு. பிரேம் நவாஸ் ஆகியோர் சிறப்பாக பேரணியை வழிநடத்தி சென்றனர். இந்த பேரணியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர் பெறும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment