ஓங்கி ஒலி எழுப்பிக்கொண்டு விரைவாக சென்றுகொண்டிருக்கும் ஒரு ஆம்புலன்சை எங்கேயாவது நாம் பார்த்தவுடன் முதலில் நம் மனதில் ஒரு வித அனுதாபம் ஏற்பட்டு பிறகு கடந்து செல்கின்ற அந்த வாகனத்திற்கு வழி விடுங்க... வழி விடுங்க... என சொல்கின்ற அளவுக்கு மனித நேயம் நம் அனைவரிடத்திலும் வளர்ந்து காணப்படும்.
இதற்கான காரணம் இல்லாமல் இல்லை மனித வாழ்வில் இதன் பயன்பாடு எண்ணிலடங்கா ஒருவருக்கு ஏற்படும் விபத்தாகட்டும், அவசர சிகிசையாகட்டும், இறப்புகள், பிரசவம் போன்ற மனித வாழ்வாதார சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு முக்கிய பங்களிப்பது ஆம்புலன்ஸ் என்பது நாம் மறுக்க இயலாது. எப்போது, எங்கே, யாருக்கு இதன் தேவை என்பதையும் யாராலும் கணிக்க முடியாவிட்டாலும் இதன் தேவையை எனக்கு தேவையில்லை என்று ஒதுக்கித் தள்ள ஒருவராலும் முடியாது. அவசர காலத்தில் இந்த வாகனத்தை பயன்படுத்தியோரிடம் கேட்டால் இதன் அருமை நமக்கு தெள்ளத்தெளிவாக உணர முடியும்.
நம் அலைபேசியில் சேமித்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு எண் என்றால் அது அவசர காலக் கட்டங்களில் நமக்கு விரைவாக உதவ முன் வரும் ஆம்புலன்ஸ்ஸின் தொடர்பு எண்கள் மட்டுமே என்றால் மிகையல்ல.
ஒரு விவசாயி தன் வயலில் உள்ள நெல்பயிருக்கு தண்ணீர் இறைத்து ஊற்றுகிறான். அவ்வாறு இறைத்த நீர் வாய்க்கால் வழியே ஓடி நெற்பயிர் உள்ள வயலை சென்றடைகிறது. அங்கே வாய்க்காலில் முளைத்திருக்கும் புல்லுக்கும் அந்த நீர் பயன்படும். அதுபோல சமூகத்தில் நன்மக்கள் செய்கின்ற இது போன்ற சில சேவைகள் பலருக்கு அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் பயனை கொடுக்கும் என்பது நிதர்சனமான உண்மை !
எண்ணிக்கையை உயர்த்தி இயற்கை சீற்றத்திலிருந்து அவற்றை பாதுகாப்போம் என்றென்றும்...
வாழ்க ஆம்புலன்ஸ் ! வளர்க ஆம்புலன்ஸ்ஸின் சேவைகள் !
வாழ்க ஆம்புலன்ஸ் ! வளர்க ஆம்புலன்ஸ்ஸின் சேவைகள் !
சேக்கனா M. நிஜாம்
நன்றி : சமூக விழிப்புணர்வு பக்கங்கள்
No comments:
Post a Comment