இலண்டன் தமிழ் வானொலியில் ‘கவியன்பன்’ அபுல் கலாமின் கவிதை :
மழையில் பள்ளிக்குச் செல்லும் மாணவி
நடுத்தெருவின்
நடுத்தெருவில்
நற்றளிர் நடை
நடுங்கும் கையில் குடை
பிஞ்சுக் கையில்
மஞ்சள் பையில்
புத்தகம் யாவும்
மொத்தமாய் நனைய
குடையின் பிடிதளர
நடை வேகமாய்
உடை நனைந்த
மழைக்காலம்
மனத்தினில்
கனாக்காலம்
விடாமுயற்சியின் விடியல்
விடாமழையிலும் குடையில் !
தடையிலாப் பயணம்
நடையிலே கவனம் !
படிப்பில் தீவிரம்
துடிப்பில் தெரியும் !
பாடம் படிக்கும்
இச்சிறுமி
பாடம் கற்பிக்கும்
ஆசிரியையாய்
“மழையென்று சொல்லி
மடிதல்;
பிழையென்று சொல்லிப்
படிப்பிக்கும்”
வாழ்த்துகிறேன் உன்னையும்
வளர்த்தெடுத்த பெற்றோரையும்
கற்பித்த ஆசிரியையும்
சோம்பல் என்னும்
சாம்பல் போக்கித்
திறமைத் தீயைத்
திறம்படத் தூண்டும்
வேகம் உன்றன் நடையில் !
இப்படித்தான்
இடியாய்ச் சத்தமும் வாழ்விலே
...இன்னலாய் வந்திடும் போதில்
துடியாய்த் தோல்வியில் துவண்டிடத்
....தோன்றிடும் வேளையில் நீயும்
பிடியாய்க் கொள்வது துணிவுடன்
....பிடித்தவுன் குடையுடன் கூடி
மடியா நோக்கிலே படிப்பினை
...மட்டுமே நினைத்தலைப் போலே !
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
நன்றி : சேக்கனா M. நிஜாம்
No comments:
Post a Comment