சினிமா ஒரு கலாச்சார சீர்கேடு, பொய்யின் பெட்டகம், கால விரயம்.உண்மை கவிஞனும், பாடகனும், தாளம் போடுபவனும் திரைக்கு பின்னாள் தள்ளப்பட்டு பொய் பிம்பம் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஓர் சாதனம் தான் சினிமா திறை[துறை]
சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு எத்தனையோ இளம் பொண்கள் வீட்டை விட்டு ஓடிப்போயும், வாழ்க்கையை சீரளித்தும் வாடியவர்கள் பல பேர்களுண்டு 10 இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து ஒரே பொய்யை தம் படத்தில் காட்டும் பொழுது பொய்கள் உண்மையாக்கப்படுகின்றது.
பழையகால சினிமாவில் சாம்பிரானி புகை போடுபவரும் நம்மல்கி நிம்மல்கி என்று தமிழை கொலை செய்பவரை தான் முஸ்லீம் என்று காட்டினார்கள்.
இன்றோ நாட்டை காட்டிக்கொடுப்பவனும் குண்டு போட்டு சாமானியனை கொல்பவனும் மனித வெடிகுண்டாய் செயல்படுபவனும் தான் சினிமாக் காரர்களுக்கு இஸ்லாமியர்கள் ! தங்கள் பணப்பெட்டியை நிறப்ப ஏன் மற்ற சமுதாயத்தை கொச்சை படுத்துகின்றீர் ?
பொய்யர்களே 5 அடி உயரத்தில் குதிப்பதற்க்கு டூப் [ மாற்று நபர் ] வைத்துக்கொள்ளும் பயந்தான் கொள்ளிகளே ஏன் இந்த வீண் பதட்டம்? ஏற்படுத்துகின்றீர்கள் ?
அனைத்து சமய, சமுதாய மக்களே அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம் எந்த சினிமா பெண்களை போகப்பொருளாக காட்டுகிறதோ, காமக்களியாட்டம் போடுகிறதோ, வாழ்க்கைக்கு ஒத்துவராத கட்டுக் கதைகளும் காட்டப்படுகிறதோ அவைகளை எதிர்த்து விஸ்பரூபம் எடுப்போம் நாமும்.
பொய் பிம்பங்களுக்கு சாட்டை அடி கொடுப்போம் !
No comments:
Post a Comment