Latest News

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!



அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது வசதியாகத்தான் இருக்கிறது மகனே... நீ கொண்டு வந்து சேர்த்த் முதியோர் இல்லம் பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது!.

முதல் தரமிக்க இந்த் இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததைஅறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஒடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன். இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியைடைகிறது.

நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்! இளம் வயதினில் நீ சிறிகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்... உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு... வாழ்க்கை இதுதானென்று நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு... உறவுகள் இதுதானென்று...!

1 comment:

  1. மனதை தொட வைத்த ஆக்கபூர்வமான பதிப்பு.பணம் காசை மட்டும் மதிக்கும் காலத்தில் தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம்.உண்மையான பாசத்தைபார்ப்பது ரொம்ப அரிதாகி விட்டது.முதுமை நிலையெய் அடைந்து விட்டால் நம் தாய் தந்தையர்க்கு நம் அன்பும் பாசமும் அரவணைப்பும் தான் தேவைப்படுகிறது. ஆதலால் தயவு செய்து நமது பெற்றோர்களை கைவிட்டு விடாமல் அவர்களிடத்தில் உண்மையான அன்பு காட்டுங்கள்.அதுதான் அவர்களுக்கு பெரிய ஆறுதல்.

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.