Latest News

ஏழை சிறுபான்மையினர் மாணவர் நலன் காப்போம்!


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பீஎச்.டி.(ஐ.பீ.எஸ்(ஓ)

5.10.2012 அன்று சென்னையில் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் உதவித் தலைவரும், முன்னாள் ஓய்வு பெற்ற பெங்களூர் போலீஸ் கமிசனருமான திரு ஹெச். சங்களியனா அவர்கள் சமூதாய அமைப்புகள் சிந்தித்து செயலாற்ற சில செய்திகளை தனது பேட்டியில் சொல்லியுள்ளார். அவர் சொல்லிய செய்தியின் சாராம்சம் கீழே உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்:

1) சிறுபான்மை மாணவர் கல்வி உதவித் தொகையினை இந்த நிதி ஆண்டில் (31.3.2013) தமிழ் நாட்டில் பள்ளிக் கல்வி உதவித் தொகை ரூ 34 கோடியினைப் பெற 2,87,659 மாணவ மாணவியர் தகுதி பெற்றவர். மேல் நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் 36, 438 பேர்கள் பயன் பெற ரூ 18.88 கோடிகள் ஓதிகீடும், தொழில் கல்வி பயிலும் 2301 பேர்களும் பயன் அடையலாம். அதனைப் பெற விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் இந்த மாதம் கடைசியாகும்(31.10.2012.

சிறுபான்மையினர் கல்வி உதவி பெற தகுதி என்ன என்று பார்க்கலாம்:

1) பள்ளி மாணவ, மாணவியர் தங்கள் பள்ளிப் படிப்பில் ஐம்பது சத வீத மதிப்பெண் பெற்றிக்க வேண்டும்.

2) அவர்களுடைய பெற்றோர் மற்றும் பாதுகாவலர் வருட வருமானம் ரூ ஒரு லக்ஷத்திற்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

3) தொழில் நுட்ப கல்வி பயிலும் மாணவ, மாணவியர் தங்களுடைய பள்ளிப் படிப்பில் ஐம்பது சதவீதம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அவர்களுடைய பெற்றோர் மற்றும் பாதுகாவலர் வருட வருமானம் ரூ இரண்டரை லக்ஷத்தினுக்கு மிகையாமல் இருக்க வேண்டும்.பள்ளி மாணவரின் பெற்றோர் வருட வருமானம் ஒரு லக்ஷம் என்பதும், தொழில் கல்வி கற்கும் பெற்றோர் வருமானம் ரூ இரண்டரை லக்ஷம் என்பதும் எப்போதோ நிர்ணயிக்கப் பட்ட வருமான வரம்பு. அதனை உயர்த்த மைனாரிட்டி கமிசனுக்கு எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்றும், அப்படி வந்தால் அதனை கண்டிப்பாக உயர்த்தத் தயார் என்றும் திரு. எச். சங்களியானா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். அதனை முக்கியமாக சமுதாய அமைப்புகள் கையில் எடுத்து வருமான வரம்பை உயர்த்த மனுக்கள் ஒற்றுமையுடன் அனுப்ப வேண்டும்.


2) தமிழக சிறுபான்மையர் ஆணையகத்திற்கு ஒரு தலைவரும், ஆறு உறுப்பினர்களும் இது வரை நியமிக்கப்படவில்லை. சமுதாய இயக்கங்கள் ஒருங்கிணைத்து சிறுபான்மையினர் ஆணையகத்திற்கு உடனே தலைவரையும், உறுப்பினர்களையும் நியமிப்பதோடு, முஸ்லிம்களுக்கும், கிருத்துவர்களுக்கும் சுழற்சி முறையில் தலைவர் பதவி தரவேண்டு என்று கோரிக்கையினையும் வைக்க வேண்டும்.

3) சிறுபான்மையினர் நலனுக்காக நடத்தப் படும் பாலிடச்னிக்குகள், ஐ.டி.ஐகள் பயிற்சி கருவிகள் பழமை வாய்ந்ததாக சொல்லப் படுகிறது. தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கேப்ப அவைகளை நவீனப் படுத்த கோரிக்கைகளை வைக்க வேண்டும்.

4) இன்னும் கூட சில முஸ்லிம்கள் நடத்தும் கல்வி நிலையங்கள் மைனாரிட்டி தகுதியினை அரசிடமிருந்தோ அல்லது மைனாரிட்டி கமிசனிடமிருந்தோ பெற வில்லை. சென்னை உயர் நீதி மன்றத்தில் நீதி அரசர் பால் வசந்தகுமார் அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட தீர்ப்பில் ஒரு தடவை மைனாரிட்டி தகுதிப் பெற்ற கல்வி நிறுவனங்கள் வருடந்தோறும் புதிப்பிக்க வேண்டியத்தில்லை என்று சொல்லியுள்ளார். இதனை கல்வி நிறுவனம் நடத்தும் சிறுபான்மையினர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

5) இது வரை ஒவ்வொரு ஊரிலுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை, ஆண், பெண், குழந்தைகள், மற்றும் வாக்கு அளிக்கக்கூடிய தகுதி உள்ளவர் பட்டியல், அவர்களுடைய வருட வருமானம், கல்வித் தகுதி போன்ற விவரங்கள் அடங்கிய விவரங்களை சமூதாய இயக்கங்கள் சேகரிக்க வில்லை. பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியருக்கு சலுகைகள் வழங்க குரல் எழுப்பி உள்ளார். அதேபோன்று சமூதாய அமைப்புகளும் முனைப்புடன் அதில் ஈடு பட வேண்டும். அப்போது தான் அரசிடமோ அல்லது மைனாரிட்டி கமிசனிடமோ நமது கோரிக்கையினை வைக்க முடியும்.

ஆகவே சமூதாய இயக்கங்கள் மைனாரிட்டி மாணவர்கள் நலன் காத்தும், அவர்களுக்கு சேர வேண்டிய அரசு சலுகை பெற்றும், மாநிலத்தில் சமூதாய மக்கள் அரசியல், கல்வி, சமூகம், பொருளாதாரத்தில் உரிய இடத்தினைப் பெற சமூதாய இயக்கங்கள் வேற்றுமை மறந்து ஒற்றுமையுடன் செயலாற்றலாமா?


AP,Mohamed Ali  

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.