Latest News

'சந்திப்பு' : பதிவர் சகோ. அபூ சுஹைமா [காணொளி] !



இணையத்தினை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்வதுடன் மட்டுமல்லாமல் ஒவ்வொருவரின் வீட்டிலும் கணிணி என்பது கட்டாயத் தேவை என்ற அளவிற்கு, இதன் பயன்பாடு கூடிக் கொண்டே செல்கிறது.

இணையம் எல்லோருக்கும் பொதுவானது. யாருக்கும் சொந்தமில்லாதது. அறிவியலின் "அடுத்தக் கட்டம்" என்று சொன்னால் மிகையாகாது அந்தளவிற்கு நிமிடத்தில் எண்ணற்ற பக்கங்கள் கொண்ட தகவல்கள் அப்லோடு செய்யப்படுகின்றன. மாணவ, மாணவிகள் இணையதளத்தை பயன்படுத்தும் போது அதில் பயனுள்ள பகுதிகளை மட்டுமே பார்க்க பழகிக்கொண்டால் சாதிக்க நிறையவே இருக்கிறது” என்பது குறிப்பிடத்தக்கது.

'சந்திப்பு' தொடருக்காக...

1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...

ஆகிய கேள்விகளை முன்வைத்து சகோ. அபூ சுஹைமா அவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

சகோ. அபூ சுஹைமா அவர்களைப்பற்றிய சிறு குறிப்பு :
அபூசுஹைமா - பிரபல மார்க்க அறிஞர் மர்ஹூம் முஹம்மது அலிய் ஆலிம் அவர்களின் புதல்வரும் மூத்தறிஞர் மர்ஹூம் அபூபக்கர் ஆலிம் அவர்களின் பேரரும் ஆவார். பள்ளிப்படிப்பை காதர் முஹைதீன் மேல் நிலைப்பள்ளியிலும், பட்டப் படிப்பை சென்னை புதுக்கல்லூரியிலும் படித்து இளங்கலை பட்டம் பெற்றவர்.

கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே பகுதி நேரமாக அச்சகத் துறையில் பணியாற்றி, பிறகு சுயமாக கணினி வரைகலையில் நிபுணத்துவம் பெற்றார்.அச்சுப்பதிப்புத் துறையிலிருந்ததால் பல்வேறு அறிஞர்களின் நூற்களையும் தட்டச்சு செய்யும்போது வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் சரளமாகப் பேச, வாசிக்க அறிந்தவர். வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத்தில் இருந்ததால் அரபு மொழியையும் பேச, வாசிக்க அறிந்தவர்.

இணையம் பிரபலமடையத் தொடங்கிய காலகட்டத்தில் வலைப்பூக்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். தற்போது அதிரை பைத்துல்மால் குவைத் கிளையின் பொறுப்பாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )

    அருமை கோதரர் அபு சுஹைமா தங்கள் கருத்துகள் மிக்க நன்றாக உள்ளது தாங்களை எனக்கு தெரியாது உங்களின் கருத்துகளை நான் படிதிருகிறேன். இப்பொழுதுதான் உங்களை யார் என்று நான் தெரிந்து கொண்டேன் பல அலகான கருத்துகளை மிக ஆலமாகவும் அலகாகவும் அமைதியாகவும் எடுத்து சொன்னீர்கள்.ஊடகத்துறையில் பனியாற்றுபவர்களுக்கு பொறுமை மிக முக்கியமான ஒன்று அதே சமையம் கருத்துக்கள் பதிபவர்களும் கொஞ்சம் இறைவனுக்கு பயந்தும் மருமையை மனதில் என்னிக்கொண்டு எழுத வேண்டும்.

    தங்களின் சமூக பணி என்றென்றும் தொடர என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சமீபத்தில் இவருடனான என் சந்திப்பில் இரண்டு விஷயங்களை நான் அவரிடம் கற்றுக்கொண்டேன்...

    1. எளிமை
    2. அமைதியான பேச்சு

    தங்களின் சமூகப்பணி என்றென்றும் தொடர என் வாழ்த்துகள் !

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.