Latest News

தமிழக அரசின் கனிவான கவனத்திற்கு !!!



தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், 149, எரிபுறக்கரை கிராமத்திற்கு உட்பட்ட பிலால் நகர், காட்டுப்பள்ளிவாசல் தெரு, M.S.M. நகர் K.S.A.லேன் ஆகிய பகுதியை உள்ளடக்கிய ஆதம் நகர் போன்ற பகுதிகள் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடம், வாக்குச்சாவடி, சமுதாயக்கூடம், ஊராட்சி அலுவலகம், குடி நீர், சாலை வசதி போன்றவற்றில் பின்தங்கியிருப்பது ஒரு பெரும் குறையாக இருந்தாலும், இப்பகுதி மிகவும் தாழ்வான நிலப்பரப்பில் அமைந்துள்ளதால். இதனால் ஒவ்வொரு வருடமும் பெய்கின்ற மழையினால் அருகில் உள்ள ஏறக்குறைய 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவைக் கொண்டுள்ள செடியன் குளத்திலிருந்து வழிந்து நிரம்புகின்ற நீரானது ஆக்கிரமிக்கப்பட்ட வடிகால்களை முறையாக தூர் வாரப்படாததல் அப்பகுதியைச் சுற்றியுள்ள பிலால் நகர், காட்டுப்பள்ளிவாசல் தெரு, M.S.M. நகர் K.S.A.லேன் ஆகிய பகுதியை உள்ளடக்கிய ஆதம் நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் புகுந்து ஆங்காங்கே நீர் தேங்கி குண்டும் குழியுமாக குளம் போல் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும்.

மேலும் கீழ்கண்ட பாதிப்புகளையும் ஏற்படுத்தி விடுகின்றன.

1. மழைக் காலங்களில் ஆங்காங்கே நீர் தேங்கி நிற்பதால் ஏற்படும் தொற்றுக் கிருமிகளால் நோய் பரவும் வாய்ப்பு.

2. பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிப்புக்குள்ளாவது.

3. இப்பகுதிகளில் இருந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வயதானவர்கள் என சாலைகளில் நடந்துசெல்ல முடியாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

4. இரவு நேரங்களில் மஸ்ஜித்க்கு சென்று தொழக்குடியவர்களும் அவதிக்குள்ளாகின்றனர்.

இது போன்ற சிரமங்களைக் கருத்தில் கொண்டு சம்பந்தபட்டப் பகுதி பட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட ஏரிபுறக்கரை கிராம உள்ளாட்சியில் வருவதால் இப்பகுதி மக்களின் சார்பாக ஆக்கிரமிக்கப்பட்ட வடிகால்களை முறையாக அகற்றி தூர் வாருதல் தொடர்பாக கோரிக்கை மனு ஓன்று ஏரிபுறக்கரை கிராம பஞ்சாயத்து தலைவர் அவர்களிடம் கடந்த 11-08-2011 அன்று கொடுக்கப்பட்டது. அதைப் பெற்ற அவர்களும் கிராம சபையைக்கூட்டி தீர்மானம் ஓன்று நிறைவேற்றி அத்தீர்மானத்துடன் கிராம நிர்வாக அலுவலகர் சான்றிதழுடன் இணைத்து பட்டுக்கோட்டை தாசில்தார் அவர்களிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவரின் முயற்சியில் தஞ்சை மாவட்ட ஆர்.டி.ஓ அவர்கள் வெள்ளப்பகுதியை பார்வையிட்டு சென்றதோடு மட்டுமல்லாமல் உடனடியாக ஆய்வு செய்வதாகவும் உறுதியளித்துவிட்டுச் சென்றார்.

இதன் தொடர்ச்சியாக சில மாதங்களுக்குப் பிறகு தஞ்சை மாவட்ட ஆர்.டி.ஓ, பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர், எரிபுறக்கரை கிராம தலைவர், தாலுக்கா சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர், தலையாறி மற்றும் பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில் குளம் மற்றும் இதனைச்சுற்றியுள்ள ஆக்கிரமணம் செய்யப்பட்டப் பகுதிகளை ஆய்வுக்கு உட்படுத்தி உடனடியாக வடிகால் வாய்க்கால்களை தூர்வாறுவதற்கு ஆவணம் செய்வதாக உறுதியுடன் எங்களிடம் சொல்லிவிட்டு சென்றவர்கள் வருடம் ஒன்றாகியும் இதுவரையில் அதற்குரிய பணிகளை மேற்கொள்ளவில்லை.


தமிழக அரசின் கனிவான கவனத்திற்கு !
இக்குளத்தின் தாழ்வானப்பகுதிகளில் முறையான தடுப்புச்சுவர் இல்லாத காரணத்தினால் உடையும் அபாயநிலைக்கு தள்ளப்பட்டுள்ளன ஏற்கனவே ஒரு முறை உடைந்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது ) இதனால் தாழ்வான பகுதியாக கருதப்படுகிற காட்டுபள்ளிவாசல் தெரு, பிலால் நகர் மற்றும் இதனைச்சுற்றியுள்ள பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாவதை தடுக்கும் நோக்கில் இக்குளத்தை ஆய்வுக்குட்படுத்தி முறையான தடுப்புச்சுவரை ஏற்படுத்தி, ஆக்கிரமிக்கப்பட்ட வடிகால் வாய்க்கால்களை அகற்றி குளத்திலிருந்து வழிந்து நிரம்புகின்ற நீரை வாய்க்காலின் வழியாக சீராகச் செல்லுவதற்கு இலகுவாக தூர் வாரப்பட வேண்டும் என்று தமிழக அரசை இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்
.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

குறிப்பு : இறைவன் நாடினால் ! விரைவில் இக்கோரிக்கையை தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மின்னஞ்சலில் அனுப்பி நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்ளப்படும்.

1 comment:

  1. இன்னும் சில வாரங்களில் பருவ மழை பொழிய இருக்கும் வேளையில் இப்பகுதி பொதுமக்கள் வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்கும் நோக்கில் இக்கோரிக்கையின் மேல் துரித நடவடிக்கை எடுப்பது என்பது தமிழக அரசின் தலையாயக் கடமையாகும்.

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.