நமதூரில் கடந்த ஒரு வருடமாக “கர்ழன் ஹஸனா” அழகிய கடன் அறக்கட்டளை என்ற பெயரில் வட்டியில்லா கடன் திட்டம் சிறப்பான முறையில் செயலாற்றி வருவது நாம் அறிந்ததே.
இன்று ( 05-08-2012 ) மாலை நமதூர் நடுத்தெருவில் அமைந்துள்ள EPMS ( English Modern School ) பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு “கர்ழன் ஹஸனா” அழகிய கடன் அறக்கட்டளையின் தலைவர் சகோ. M.C. அலி அக்பர் அவர்களின் தலைமையில் இனிதே துவங்கியது.
நிகழ்ச்சியின் நிரலாக......
1. வரவேற்புரை சகோ. M.C. அலி அக்பர் அவர்கள்.
2. சகோ. யூசுப் ஆலிம் அவர்கள் தனது சிறப்புரையாக “வட்டியின் கொடுமை” பற்றி பேசினார்.
3. சகோ. சேக் முஹம்மது அவர்கள் தனது சிற்றுரையில் “இஸ்லாமிய பொருளாதாரத்தை” பற்றி பேசினார்.
4. “கர்ழன் ஹஸனா” அழகிய கடன் அறக்கட்டளை தோன்றிய விதம் பற்றி அதன் செயலாளர் சகோ. M. I. ஜமால் முஹம்மது அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டு பேசினார்.
5. “கர்ழன் ஹஸனா” அழகிய கடன் அறக்கட்டளையின் கடன் விவரங்கள் பற்றி அதன் பொருளாளர் ஆசிரியர் A.M. மஹபூப் அலி அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டு பேசினார்.
6. “கர்ழன் ஹஸனா” அழகிய கடன் அறக்கட்டளையின் துணைத்தலைவர் சகோ. S. அனஸ் அவர்களால் நன்றியுரை வாசிக்கப்பட்டன.
7. இறுதியாக துவாவுடன் உரைகள் இனிதே நிறைவுற்று “இஃப்தார் விருந்து” நடைபெற்றன.
குறிப்பு :
1. இந்நிகழ்ச்சியில் ஏராளமான சிறப்பு அழைப்பாளர்களும், இவ்அறக்கட்டளையின் மூலம் பயனுற்றவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
2. “இஃப்தார் விருந்து” இதன் நிர்வாகிகள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment