Latest News

  

வதந்தி எதிரொலி-குறுந்தகவலுக்கு தடை!

வடமாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப் படுவதாக எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக், டிவிட்டரில் காட்டுத் தீயாகப் பரவியது. இந்த வதந்தியை தொடர்ந்து  பெங்களூர், ஹைதராபாத்தில் இருந்து வடமாநிலத்தவர்கள் ரயில்கள் மூலம்  சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.


இந்நிலையில் மொத்தமாக அனுப்பப் படும் குறுந்தகவல்களுக்கு(எஸ்.எம்.எஸ்) மத்திய அரசு தடை விதித்துள்ளது.


மேலும் இது குறித்து மக்களவையில் எதிர்கட்சிகளின் கேள்விக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ஷிண்டே இந்த குறுந்தகவல் வதந்தி எப்படி பரவியது என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை என்றும் தங்கள் ஊருக்கு செல்லும் வடகிழக்கு மாநிலத்தவர்களின் ரெயில்களுக்கு பாதுகாப்பு அளிக்கப் படும் எனவும் கூறியுள்ளார்.

1 comment:

  1. வதந்திகள் காரணமாக பெங்களூருவில் இருந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்கு வெளியேறிய வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சென்ற ரயில் ஒன்றில் பயணம் செய்த நான்கு முஸ்லீம்கள், சனிக்கிழமை இரவு சக பயணிகள் சிலரால் கொல்லப்பட்டனர். இந்த நால்வரின் உடல்கள் அவர்களின் சொந்த கிராமங்களில் அடக்கம் செய்யப்பட்டன.
    கொல்லப்பட்டவர்கள் அடக்கம் செய்யப்பட்டபோது அங்கு சுமார் 6000 பேர் திரண்ட்தாகவும், அங்கு பதற்ற நிலை நிலவியதாகவும், ஆனால் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை என்றும் மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.
    தொடர்புடைய விடயங்கள்
    வன்முறை
    இந்த சம்பவத்தில் மேலும் 10 முஸ்லீம்கள் காயமடைந்தனர். மேற்கு வங்க மாநிலத்தின் வட பகுதியில் அமைந்துள்ள சிலிகுரி என்ற நகரத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவரும் இவர்களில் மூவரின் நிலை மோசமாக இருப்பதாகவும், அவர்களுக்கு பிராண வாயு அளிக்கப்பட்டுவருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
    இதே ரயிலில் பயணம் செய்த மற்றொரு இளம் பையன், ஜாகீர் ஹுசைன், என்பவர் இன்னும் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்று போலிசார் கூறினர்.
    இந்த சம்பவம் எப்படி நடந்த்து என்று அதிகாரபூர்வ கருத்து எதுவும் தெரிவிக்கப்படாவிட்டாலும், பிபிசி , காயமடைந்த ஒருவரின் சகோதரர் , ஷாஜஹான் அஹ்மது சௌத்ரி என்பரிடம் கேட்டபோது, அவர் இந்த ரயிலில் பயணம் செய்த அசாமிய சக பயணிகள், மற்ற பயணிகள் அனைவரிடமும், அவர்களது அடையாள அட்டையைக் கேட்டு, முஸ்லீம்களை மட்டும் குறிவைத்தனர் என்றார். குறிப்பிட்ட ரெயில் பெட்டியின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு அதில் இருந்த முஸ்லீம்கள் இரும்புத் தடிகள் மற்றும் கத்திகளால் தாக்கப்பட்டனர் என்றார் அவர். இந்த தாக்குதல் சுமார் இரண்டரை மணிநேரம் நீடித்த்து என்றும் அவர் கூறினார்.
    அன்றிரவு சுமார் ஒரு மணிக்கு ஞாயிறு அதிகாலை) அவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஓடிக்கொண்டிருந்த ரயில் வண்டியிலிருந்து வெளியே வீசப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.
    இந்த ரயிலில் 10 ரயில்வே பாதுகாப்புப் படையினரும், ஐந்து அரசாங்க ரயில்வே போலிசாரும் பயணம் செய்தனர் என்று கூறிய வட கிழக்கு எல்லைப்புற ரயில்வே அதிகாரி ஒருவர், ஆனால் மூடப்பட்ட இந்த ரயில் பெட்டிக்குள் என்ன நடந்த்து என்பதை யாரும் அவர்களுக்குத் தெரிவிக்கவில்லை என்றார்.
    இறந்தவர்களின் உடல்களும், காயமடைந்தவர்களும், மேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தின் பாலக்காட்டா மற்றும் பெலகோபா ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையே கண்டெடுக்கப்பட்டனர் என்றும் தெரிகிறது.
    போலிசாரும் மாநில நிர்வாகமும் இந்த சம்பவம் குறித்து மௌனம் காக்கின்றன. இந்த சம்பவம் நடந்த அடுத்த நாள், பெங்களூரிலிருந்து குவாஹாத்தி நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு அசாம் மாநிலத்தவரும் கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு அவரது உடல் புதிய ஜல்பைகுரி ரெயில்வே நிலையத்தின் அருகே ரயில் தண்டவாளத்துக்கு பின்புறம் கண்டெடுக்கப்பட்டது. அவரது கொலைக்குக் காரணம் என்ன என்பதை போலிசாரோ அல்லது ரயில்வே நிர்வாகமோ உறுதிப்படுத்தவில்லை.===http://www.bbc.co.uk/tamil/india/2012/08/120821_muslimsburried.shtml

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.