Latest News

  

நோன்பு பெருநாள் சந்திப்பு (2012) துளிகள் [ காணொளி ] !

அல்லாஹ்வின் பேரருளால் 19-08-2012 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் டேரா-ஈத்கா மைதானத்தில் அதிகாலை முதலே மக்கள் பெருந்திரளாகக் கூடினர். காலை 6:15 மணிக்கு பெருநாள் தொழுகை தொடங்கியது. சரியாக 6:45 மணிக்கு பராஹா சாலை வாசலருகே அதிரைவாசிகள் அணிஅணியாகக் கூடத்தொடங்கினர். சந்திப்புக்கு வந்திருந்த பலர் குடும்பத்தினருடனும் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தது கூடுதல் சிறப்பு. வீடியோ கேமரா மற்றும் தொழில்நுட்ப புகைப்படக் கலைஞர்கள் குழுவினர் அதிரைவாசிகளை சுற்றிச் சுற்றி படம் பிடித்தது, மைதானத்திற்கு வந்திருந்த பிற ஊர்/நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதிரை தவிர்த்து கீழக்கரை, காயல்பட்டினம், லெப்பைக் குடிக்காடு மற்றும் ஓரிரு ஊரைச்சார்ந்தவர்களும் தனித்தனியாக சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டிருந்தாலும், அதிரைவாசிகள் 400 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தைக் காணமுடிந்தது. அல்ஹம்துலில்லாஹ். அதிகாலை வெயிலின் வெட்கையையும் பொருட்படுத்தாமல் வேட்கையுடன் வந்திருந்தது அதிரைவாசிகளுக்கு இத்தகைய சந்திப்புகளில் இருக்கும் ஆர்வத்தையே காட்டுகிறது.

இந்த இனிய சந்திப்பின்போது வந்திருந்த அதிரைவாசிகளுக்கு “ஈட்ரானிக்ஸ்” நிறுவனத்தார் சார்பில் இனிப்பு மற்றும் உலர் பழங்கள் அடங்கிய அன்புப்பரிசு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.