Latest News

  

அதிரை பைத்துல்மாலில் “விழிப்புணர்வு பக்கங்கள்” புத்தக வெளியீடு !


அதிரை பைத்துல்மால் ( ABN ) ! ( இஸ்லாமிய ஏழைகளின் நிதியகம் ) ‘HELP’ HELP US TO HELP THE POOR  என்ற நல்ல ஒரு அடைமொழியுடன் அதிரை வாழ் ஏழை எளியோருக்காக பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு இயக்கங்கள் சாராத மார்க்க வழிகாட்டுதலுடன் ஆரம்பிக்கப்பட்டு நல்ல திறம்பட “அடக்கமாக“ செயல்பட்டுக் கொண்டுருக்கிற ஒரு இஸ்லாமிய அமைப்பு.

பைத்துல்மால் சார்பாக அதன் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திரக் கூட்டம் ஆசிரியர் ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் அவர்கள் தலைமையிலும், வழக்கறிஞர் A. அப்துல் முனாப், S. அப்துல் ஹமீத், O.K.M.சிபஹத்துல்லா, S.M. முஹம்மது முஹைதீன், A.S. அப்துல் ஜலீல் O. சாகுல் ஹமீத், இப்ராகிம் ஆகியோர்கள் முன்னிலையிலும் இனிதே ஆரம்பமானது.


நிகழ்ச்சியின் நிரலாக.............

1. கிராஅத் மெளலவி அப்துல் காதர் ஆலிம் அவர்கள்

2. வரவேற்புரை சகோ. O.K.M.சிபஹத்துல்லா அவர்கள்

3. “ஜக்காத்” மற்றும் “பித்ரா” நிதி வசூல் செய்வது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

4. கல்வி உதவி கோரி பெறப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விவாதம் செய்யப்பட்டது.

5. சகோ. சேக்கனா M. நிஜாம் அவர்கள் எழுதிய “விழிப்புணர்வு பக்கங்கள்” புத்தகம் வெளியீடப்பட்டது.

6. நன்றியுரை சகோ. S. அப்துல் ஹமீத் அவர்கள்

7. இறுதியில் துவாவுடன் நிகழ்ச்சி மகிழ்ச்சியாக நிறைவுற்றது.

இதில் பைத்துல்மாலின் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் என கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.



அதிரை பைத்துல்மாலின் அன்பான வேண்டுகோள் !

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

கடந்த பத்தொன்பது ஆண்டுகளாக அதிரை பைத்துல்மால் பல அளப்பறிய சேவைகளை நமதூர் ஏழை எளியோருக்காக செய்து வருவதைத் தாங்கள் அறிவீர்கள். தங்களைப் போன்ற தரும சிந்தனை உள்ளவர்களின் உதவி கொண்டு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இச்சேவைகள் தொடர்ந்து தொய்வின்றி நடந்து கொண்டிருக்கின்றன. ( அல்ஹம்துலில்லாஹ் )

இதற்காக தன்னலம் பாராமல் சமூக ஆர்வலர்களாகிய அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளும், முஹல்லா நிர்வாகிகளும் அரும்பாடுபட்டு சேவை செய்து வருகின்றனர். வட்டியும், அநீதியும் மிகைத்து நிற்கின்ற இக்காலகட்டத்திலும் அதிரை பைத்துல்மால் அதனை எதிர்த்து நின்று அழித்திட தன்னால் இயன்ற சேவைகளை ஏழை, எளியோருக்கு செய்து வருகின்றது.

இச்சேவைகளை தொடர்ந்து செய்திட தங்களைப் போன்ற தாராள மனமும், பெருந்தன்மையும் கொண்டோர்களின் நிதி உதவி தேவைப்படுகின்றது. தற்போது அதிரை பைத்துல்மாலில் வட்டியில்லா நகைக்கடன் திட்டம், கைவிடப்பட்ட முதியோர்கள், விதவைகள் ஆகியோர்களுக்கான பென்ஷன் வழங்கும் திட்டம், ஏழை குமர்களுக்கான திருமண உதவி வழங்கும் திட்டம், ஏழை மாணவ / மாணவிகளுக்கான கல்வி உதவி வழங்கும் திட்டம் மற்றும் மருத்துவ உதவி வழங்கும் திட்டம் ஆகியன சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொரு வருடமும் பெறப்படுகிற ஜக்காத் நிதி, கூட்டுக்குர்பானி திட்டம் மற்றும் நன்கொடைகள் போன்றவற்றின் மூலம் அல்லாஹ் உதவி கொண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆகவே நல்லுள்ளம் படைத்த தாங்கள் கடந்த வருடம் போல் இவ்வருடமும் அதிரை பைத்துல்மாலுக்கு தங்களுடைய ஜக்காத் நிதியை வழங்கி அல்லாஹ்வின் அளப்பறிய திருப்பொருத்தத்தை அடைந்து கொள்வீர்களாக ! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்களுக்கும் அல்லாஹ் இம்மை-மறுமைப் பேறுகளை வழங்குவானாக, ஆமின். வஸ்ஸலாம்.

வங்கி கணக்கின் விவரம் :

அதிரை பைத்துல்மால்
C/A. No. 115-53-332 ( Current Account )
தனலக்ஷ்மி பேங்க்
அதிராம்பட்டினம் கிளை


குறிப்பு :
கடந்த 27/05/2012 அன்று  சென்னை டெக்னோ பார்க் தலைவர், கீழக்கரை ஹாஜி ஜனாப்.எஸ்.எம்.செய்யது அப்துல் காதர் ( சீனா தானா ) அவர்கள் மற்றும் எஸ்.எம்.இதயத்துல்லாஹ் ( தலைவர் இஸ்லாமிய இலக்கிய கழகம்,சென்னை ) ஆகியோர்கள் கலந்துகொண்ட சிறப்பு நிகழ்ச்சி அதிரை பைத்துல்மால் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் சீனா-தான அறக்கட்டளையின் சார்பாக பெறப்பட்ட ரூ100000/- மும், அதிரை பைத்துல்மால் சார்பாக ரூ 202000/-மும் ஆகக்கூடுதல் ரூ 302000 /- ஐ 38 நபர்களுக்கு வட்டியில்லா கடனாகவும், மருத்துவ உதவியாகவும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.