Latest News

தமிழக அரசு மருத்துவர் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு பச்சை துரோகம்


தமிழக அரசு மருத்துவர் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு பச்சை துரோகம் செய்ததா? - பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.

தமிழ்நாடு அரசு சமீபத்தில் அரசு சார்ந்த மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக தற்காலிகமாக நியமனம் செய்த மருத்துவர்களில் ஒருவர் கூட முஸ்லிம இல்லை என்று முதலில் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மைதீனும் அதன் பின்னர் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களும் அறிக்கை வெளியி்ட்டனர். இவர்களை அடிபிசகாமல் பின்பற்றி சமுதாயத்தில் பொய்யை மூலதனமாக கொண்டு இயங்கும் ஒரு தறுதலை அமைப்பு போராட்டம் கூட நடத்தியது. தமிழக அரசு சமீபத்தில் நியமனம் செய்த தற்காலிக மருத்துவர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்பது உண்மை தானா என்பதை ஆய்வுச் செய்தோம்.

புதுக்கோட்டை சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் உச்சபட்ச நிலையில் இருந்த நிலையில் கத்தாரில் இருந்த நானும் அ. அஸ்லம் பாஷாவும் இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயிடம் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு கேட்ட போது அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்ததுடன் சம்பந்தப்பட்ட துறையிடம் விசாரித்து வந்ததும் தகவல் தருவதாக கூறினார். இதன் பிறகு அமைச்சரே தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தமிழக அரசின் மருத்துவத் துறைக்கு 10A 1 விதிமுறையின் படி ஜனவரி 20 முதல் மார்ச் 27 வரை 688 மருத்துவர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டதாகவும் இதில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 24 மருத்துவர்களும் திறந்த போட்டியில் (Open Competition) 28 மருத்துவர்களும் நியமனம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். இது குறித்து எழுத்துபூர்வமாக தகவல் அளிக்கும் படி கேட்டுக் கொண்டோம். புதுக்கோட்டையிலிருந்து சென்னை திரும்பியவுடன் தகவல் அளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சென்னை திரும்பிய பிறகு அவரை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் செ. ஹைதர் அலி, பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது மற்றும் கல்வி வழிகாட்டித் துறையின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம்.எப். கான் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அமைச்சர் 688 மருத்துவர்களில் 52 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்ட பட்டியலை வழங்கினார். அமைச்சர் அளித்த பட்டியலை நாம் ஆய்வுச் செய்ததுடன் மருத்துவர் நியமன வாரியத்தின் அதிகாரிகளுடன் பேராசிரியர் எம்.எப். கானும், மனிதநேய மக்கள் கட்சியின் முன்னாள் தலைமை நிலையச் செயலாளர் திருவள்ளுர் இஸ்மாயிலும் விளக்கம் கேட்டனர். பேராசிரியர் காதர் மைதீனும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் இவர்கள் வெளியிட்ட அறிக்கையை நம்பி ஆய்வுச் செய்யாமல் முற்றுகை போராட்டம் அறிவித்த ஜைனுல் ஆபிதீனும் விவரம் என்னவென்று அறியாமல் விசாரணை எதுவும் செய்யாமல் செயல்பட்டுள்ளார்கள் என்பதை அறிய முடிந்தது.

மக்கள் நல்வாழ்வு துறையின் இணையத் தளத்தில் தற்காலிக மருத்துவர் நியமனத்திற்காக மார்ச் 26 மற்றும் 27ல் கலந்தாலோசனைக்கு (counselling) தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இதில் 1384 மருத்துவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. ஆனால் இது நியமனம் பெற்றவர்களின் ப்ட்டியல் இல்லை. கலந்தாய்விற்கான பட்டியல் தான். இந்த பட்டியல் பல்வேறு கட்டங்களாக ஜனவரி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வந்த கலந்தாய்வில் கடைசி 2 கட்டங்களுக்கான கலந்தாய்விற்காக அழைக்கப்பட்டவர்களின் பட்டியல். அப்போது ஏன் முஸ்லிம்கள் ஒருவர் கூட இந்த பட்டியலில் இல்லை என்றால் இந்த கடைசி 2 கட்ட கலந்தாய்வுக்கு முன்பாகவே முஸ்லிம் மருத்துவர்கள் 52 பேர் நாம் முன்பே குறிப்பிட்டது போல் நியமனம் செய்யப்பட்டு விட்டார்கள. இப்படி நாம் சொல்லும் போது இந்த 1384ல் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு இல்லையா என்ற கேள்வி எழும். இந்த 1384 பேரையும் சேர்த்து கலந்தாய்வுக்காக 5856 மருத்துவர்கள் அழைக்கப்பட்டார்கள். இவர்களில் 1963 மருத்துவர்கள் மட்டுமே 2012 ஜனவரி 20, 21, 22. 23 மற்றும் மார்ச் 22, 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் நடைபெற்ற கலந்தாய்வில் பங்குக் கொண்டார்கள். இவர்களில் கலந்தாய்வுக்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட 835 இடங்களுக்கு 688 பேர் நியமனம் செய்யப்பட்டார்கள் என்பதை மருத்துவத் துறை நமக்கு விரிவாக பட்டியலை அளித்துள்ளது. அந்த பட்டியலின் சுருக்கும் இதோ

688 மருத்துவர்களில் திறந்த போட்டியில் 28 பேர் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5 இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 பேர் ஆக மொத்தம் 52 முஸ்லிம் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் விபரம் வருமாறு

1. சமீமா 2. சைய்யது அப்துல் காதர் 3. அஹ்மது ஷேக் 4.ஜின்னா 5. எஸ்.எம். இம்தியாஸ் 6.எஸ. நர்கீஸ் 7. எஸ். சையது பாகர் 8.ஆர். மன்சூரா சாஹிபா 9. ஏ. உஸ்மான் 10.முஹம்மது மீரான் 11. ஏ. கதீஜா சமீஹா 12. பி. சமீமா 13. ஏ. அர்ஷியா தபசும் 14.ஏ. ஆரிப் உதுமான் முகைதீன் 15. எம் ஆசிக் அல் முஹம்மது 16.நிலோபர் நிஷா 17.எஸ். அலிமா பானு 18.ஏ. அஸ்கர் அலி 19.பி. சாகுல் ஹமீத 20.எம். சபீனா 21.ஏ. மரிஜியா 22.ஷேக் முஹம்மது ராஜா 23. ஏ. சலீம் 24. ஆர். முஹம்மது ஹில்மி 25. சைய்யது அப்துல்லா முஹம்மது அமீன் 26. சைய்யது நிஷான் பாத்திமா 27. பி.ஐ. சாஜித் அலி 28.எம். பைரோஸ் 29.எம. முஹம்மது இப்ராஹீம் 30.எம.ஜி. ஷாஹித் அப்துல்லா 31. சாஜிதா நஸ்ரின் 32.அஜ்மல் கான் 33. ரியாஸ் சுல்தானா 34. எப். முஹம்மது ரபி 35.எஸ். பகிருத்தீன் ஆரிப் கான் 36. எ. அபுல் ஹசன் 37. முனவர் அலி மித்ஹத் ஹப்சா 38.எம். மஜிதா பேகம் 39. டி.ஏ. ரிஸ்வான் அஹ்மது 40.ஹெச். சாஜிதா பர்வீன் 41. எ. நசுரீன் 42.எஸ். தய்யுபா பாத்திமா 43. ஜே.ஏ.எம்.சையத் இப்ராஹீம் ஷா 44.எஸ்.ஐ. சாஹித் அக்பர் 45.ஆர். பர்கத் 46. கே. ரியாஸ் பாத்திமா 47.ஏ. சுல்தான ராஜா 48. ஏ. ஆசிபா பேகம் 49. ஏ. பர்கத் நிஷா 50. எ. அப்துல் ரஹீம் 51. எல். சப்னம் 52. அஹ்மது பாசில்



ஜனவரி 2 2012ல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எம்.எஸ். 2ன் படி 835 மருத்துவர்கள் நியமனம் செய்யயப்பட வேண்டும். இதில் மேற்கண்டவாறு 688 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். 147 பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு எவ்வாறு பின்பற்றப்படுகின்றது என்பதை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேறற்றக் கழகம் தொடர்ந்து கண்காணித்து வரும். இதில் துரோகம் இழைக்க அனுமதிக்க மாட்டோம். ஆனால் ஆய்வுச் செய்யாமல் மலிவான விளம்பரத்தில் ஈடுபட மாட்டோம் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும்.

1 comment:

  1. நாங்கள் ஒன்றும் சீட்டு அரசியல் நடத்தவில்லை ஐந்து வருடங்களுக்கு தன் கூட்டணி கட்சி எது செய்தாலும் ஆதரிப்பதற்கும் எதிர் கட்சி எந்த நன்மை செய்தாலும் எதிர்பதற்கும் முஸ்லிம்களுக்கு யார் நன்மை செய்தாலும் ஆதரிப்போம் யார் தீங்கு செய்தாலும் எதிர்ப்போம்.
    ஜிஹாதில் சிறந்த ஜிஹாத் அக்கிரமகார ஆட்சியாளர்களுக்கு முன்னாள் நேர்மையை பேசுவது மிக சிறந்த ஜிஹாத்

    //தமிழக வரலாற்றில் 1977 லிருந்து முன்னாள் முதல்வர் இந்நாள் முதல்வரின் ஆட்சி முறையை ஏற்றுக் கொண்டதாக சரித்திரம் கிடையாது. இது தமிழகத்தில் மட்டும் நடைபெறும் தரித்திரம்.//

    ஒரு அரசு கொண்டுவந்த திட்டத்தை மற்றொரு அரசு செயல்படுத்தாமல் இருப்பது உண்மைதான் ஆனால் ஒரு அரசு முஸ்லிம்களுக்கு அளித்த சலுகைகளை முன்னாள் முதல்வர் இல்லை என்று கூறுகிறார். முன்னாள் முதல்வர் அளிக்கும் பேட்டியை மத்திய மாநில அரசு அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் முக்கியத்தும் கொடுத்து படிப்பார்கள் அவர் தவறாக கூறியிருந்தால் உடனே மறுப்பு தெரிவிப்பார்கள் இந்த விஷயத்தில் இதுபோல் நடந்தா?

    த த ஜ தமிழ்நாடு தேர்வானைத்தை முற்றுக்கை செய்வதாக அறிவிப்பு செய்து அனுமதியும் பெற்றது. ஆர்பாட்டத்திற்கு முன்பே 52 நபர்களை நியமித்து இருந்தால் ஆர்பாட்டம் நடத்த அனுமதித்து இருப்பார்களா?

    இப்பொழுது ம ம கட்சியினர் பட்டியலை வெளியிட்டார்களே இது பத்து நாட்களுக்கு மேலாக முஸ்லிம் இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் அரசை விமர்ச்சித்தார்களே இந்த பட்டியலை முன்பே வெளியிட வேண்டியது தானே? இந்த பட்டியல் எந்த தேதியில் வெளியிடப்பட்டது?

    ஒரு இயக்கத்தின் மீதும் தனி நபர் மீதும் உள்ள வேறுப்பு நம் சமுதாயத்திற்கு செய்யும் அநீதியை கூட நியாயப்படுத்தும் நிலையில் சில சகோதர்களின் எழுத்து உள்ளது.

    //போராட்டம் நடத்திய ததஜவின் அறியாமையும் உரிய ஆதாரங்களின் அடிப்படையில் அம்பலப்படுத்தியுள்ளது மமக.//

    தனது கூட்டணி கட்சிக்கு விசுவாசமாக இருப்பதில் ம ம கட்சியினருக்கு நிகராக யாரும் இல்லை கடந்த ஆட்சியில் ஆசிரியர்கள் நியமனத்தில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டதாக த த ஜ ஆர்பாட்டம் அறிவித்தது. உடனே ம ம கட்சியனர் ரோஸ்டர் முறையில் கிடைக்கும் இவர்கள் சுய விளம்பரத்திற்காக போராட்டம் அறிவிக்கிறார்கள் என்று கூறினர் போராட்டம் நடத்திய பிறகு அன்றைய முதல்வர் ஆசிரியர் பணிக்கு முஸ்லிம்கள் நியமிக்காததற்கு அதிகாரிகளின் தவறுகள்தான் காரணம் என்றும் இதுபோல் இனி நடக்காது என்றும் கூறினார். இது யாருடைய அறியாமை?

    முதல்வரை புகழவேண்டும் என்பதற்காக தானே புயல் மீண்டும் வரதா என்று தமிழக மக்கள் ஏங்குகிறார்கள் என்று கூறியாது யாரின் அறியாமை?

    இந்தியாவிலேயே பாபர் மசூதியின் அநியாய தீர்ப்பை வரவேற்ற ஒரே கட்சி ம ம கட்சிதான் அதன் தலைவர் முஸ்லிம்களுக்கு இந்த தீர்ப்பு வெற்றியின் முதல்படி என்று கூறினார் இது யாருடை அறியாமை?

    இவர்களின் அறியாமையை பற்றி இன்னும் அறிய இன்ஷா அல்லாஹ் 24.6.2012 மண்ணடியில் ’த மு மு கவின் 7ஆம் அறிவு’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளனர் அதையும் பாருங்கள்

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.