பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அதிரை நல் வாழ்வு பேரவையின் சார்பாக நடைபெற்ற இன்றையக் கூட்டத்தில் ஜனாப் அக்பர் ஹாஜியார் தலைமையிலும், ஜனாப் அஹ்மது அலி ஜாஃபர், ஜனாப் O.K.M. சிபஹத்துல்லாஹ், ஜனாப் “கவியன்பன்” அபுல் கலாம், ஜனாப் அஹமது ஹாஜா, ஜனாப் N.A. முஹம்மது யூசுப் ஆகியோர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் நமதூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :
1. கடந்த 30-12-2006 முதல் காரைக்குடி- திருவாரூர் வழியாக சென்னை வரை சென்று கொண்டிருந்த “கம்பன் எக்ஸ்பிரஸ்” ரயிலை நிறுத்தியதை அடுத்து திருவாரூர் - காரைக்குடி அகல இரயில் பாதைப் பணிகளை விரைவாக முடித்துதர வேண்டும் என்பதற்காக வேண்டி பல போராட்டங்களை அதிரைப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து ஊர்கள் சார்பிலும் அங்குள்ள சமூக ஆர்வலர்கள் சார்பிலும், கட்சிகள் சார்பிலும் நடத்தி விட்டோம். ஆனால் எதற்கும் செவி கேட்காமல் மத்திய இரயில்வே துறை உள்ளது. கிட்டத்தட்ட நாட்டில் உள்ள அனைத்து இரயில்வே வழித்தடங்களும் அகல இரயில் பாதையாக மாறிக்கொண்டு வருகிறது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிரைப்பட்டினம், பட்டுக்கோட்டை ஆகிய ஊர்கள் தனி தீவுப்போல் காட்சியளிக்கின்றன. இருக்கின்ற பாதையை மத்திய அரசு அகல பாதையாக மாற்றுவதற்கு ஏன் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
மத்திய அரசால் அகல ரயில் பாதை பணிகள் துவக்குவதில் ஏற்படும் காலதாமதத்தை கருத்தில்கொண்டு துரிதமாக செயல்படுத்தும் விதமாக கடந்த 14-02-2012 அன்று உயர் நீதி மன்றத்தில் பொது நல மனு ஒன்றில் குறுகிய ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றிக்கேட்டு நமது பேரவை சார்பாக எனது பெயரில் ( அஹமது அலி ஜாஃபர் ) தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை நீதி மன்றம் விசாரணைக்காக எடுத்துக்கொண்டு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இறைவன் நாடினால் விரைவில் சுமூக தீர்வு எட்ட உதவி புரியட்டும்.
2. மனிதராக பிறந்த நமக்கு சில அடிப்படைக் கடமைகள் உள்ளன. உடலை ஆரோக்கியமாக வைத்தல், உள்ளத்தை தெளிவாக உற்சாகமாக வைத்தல், தொழிலை நியாய-தர்ம அடிப்படையில் சமுதாயத்திற்கு பாதிப்பில்லாமல் செய்தல், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள்- இவ்வாறாக பல்வேறு கடமைகளை நாம் சரியாக செய்ய வேண்டியுள்ளது.
மேற்கண்டவை போக, தம்மை உருவாக்கிய இந்த சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய சில கடமைகள் உள்ளன. பொதுவாக சான்றோர்கள் தாங்கள் வாழுகிற காலத்தில் வருங்கால மக்கள் நலமாக இருக்க பல வகையில் சிந்திக்கிறார்கள். செயல்படுகிறார்கள். அவர்கள் சமுதாயத்தின் மேல் அக்கறையும் அன்பும் கொண்டு தங்களுக்கு என்ன கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் கவலைப்படாது நல்லது பல செய்கின்றனர். அவ்வாறு தொலைநோக்குப் பார்வையுடன் எத்தனையோ பெரியவர்கள் செய்த செயல்களின் விளைவை நாம் அனுபவிக்கிறோம்.
அந்த வகையில் மரக்கன்றுகளை நட்டு அவற்றிற்கு தண்ணீர் ஏற்பாடு செய்து மரங்களாக உருவாக்குவது என்பது நம்முடைய முக்கிய கடமையாகும்.
இதற்காக “பசுமை திட்டம் – அதிரை“ என்ற பெயரில் தென்னை, பலா, புளியை, எலந்தை, மா போன்ற மரங்கன்றுகள் நடலாம் என எண்ணியுள்ளோம். இதன் முதல் முயற்சியாக நமதூரில் பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையை ஒட்டியும் அதாவது வண்டிப்பேட்டையிலிருந்து மின்சார வாரியம் வரையில் உள்ள சாலையோரப் பகுதியிலும், இதற்கு அடுத்த முயற்சியாக அதிரை பேரூராட்சி கிழக்கு கடற்கரைச் சாலையோரப் பகுதியிலிருந்து பிலால் நகர் இரயில்வே கேட் வரையும் என்பதை முடிவு செய்துள்ளோம்.
நிதி உதவி !
நீதிமன்ற வழக்கு செலவினங்கள் மற்றும் “பசுமை திட்டம் – அதிரை“ போன்ற பணிகளுக்காக ஒவ்வொரு சகோதரர்களின் பங்கும் அவசியம் இதில் இருக்க வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, இதற்காக நமது பேரவை சார்பாக கீழ்க்கண்ட வங்கி கணக்கு சேவை தொடங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தங்களுக்கு தெரிவித்துக்கொண்டு இதற்காக தாராளமாக நிதி உதவி செய்து எங்களின் சமூக பணி தொய்வின்றி தொடர ஊக்கம் கொடுத்த வாழ்த்த வேண்டுமாய் அன்புடன் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
வங்கி கணக்கு :
அஹமது அலி ஜாஃபர்
S/B A/c No. : 426394434
இந்தியன் வங்கி
தேனம்பேட்டை கிளை – சென்னை - 600018
இப்படிக்கு,
கெளரவத் தலைவர் மற்றும் தலைவர்,
நல் வாழ்வு பேரவை,
அதிரை
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்
No comments:
Post a Comment