பரிவுக்காட்ட ஆளில்லாமல்
பிரிவுகளில் பிதுங்கியதுப் போதும்;
அழுத இரவுகளும்;
அழுத்தும் கனவுகளும்;
இனி - ஒய்ந்துப்போகட்டும்;
கொஞ்சம் ஒய்வும் எடுக்கட்டும்!
மூட்டுவலியும்
முதுகுவலியுடன்
பாலையில் பாழாவதற்கு
முன்னே;
முந்திக்கொண்டு
வளைடாவிற்கு
முற்றுப்புள்ளி வைத்தேன்!
சத்தான முடிவுகளால்
விசா ரத்தாகிப்போனது;
இனி - நித்தம் என்
இரத்த உறவுகளோடு
நிஜத்திலே
கதைத்துச் சிரிப்பேன்;
மன கனத்தை
அறுத்து எடுப்பேன்!
கொளுத்தும் வெயிலானாலும்;
கரண்டே இல்லையென்றாலும்;
மகிழ்ந்து ரசிப்பேன்;
என் மழலையின்
மடியில் கிடப்பேன்!
No comments:
Post a Comment