இன்னும் சற்று நேரத்தில் "அதிரை எக்ஸ்பிரஸ் கல்வி அவார்டு 2012" வழங்கும் நிகழ்ச்சியும் அதிரை எக்ஸ்பிரஸ்ன் பங்களிப்பாளர் சேக்கன்னா நிஜாம் அவர்கள் எழுதிய i "விழிப்புணர்வு பக்கங்கள்" என்ற இலவச புத்தக வெளியீடு நிகழ்ச்சியும் அதிரை அனைத்து முஹல்லாஹ் 6வது கூட்டத்தில் நடைபெற உள்ளது .
இதற்க்கான ஏற்பாடுகளை சேக்கன்னா நிஜாம் அவர்களின் பிலால் நகர் இல்லத்தில் செய்யப்பட்டுள்ளது .
இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியில் அதிரையின் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாகை சூடிய மாணவ மாணவிகள் ,பெற்றோர்கள் சக வலைப்பூ நடத்துனர்கள் என அனைவரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
எனவே கடல் கடந்து வாழும் அதிரையின் சொந்தங்கள் இந்நிகழ்ச்சி வெற்றியடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி பிரார்த்திக்க கேட்டு கொள்ள படுகிறார்கள் .
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்
No comments:
Post a Comment