பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
கடந்த 15.06.2012 வெள்ளிக் கிழமை அன்று அமீரக தாஜுல் இஸ்லாம் இளைஞர்
சங்கத்தின் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைவர் தலமையில், மற்ற
நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்வமர்வின் முடிவில் கீழ் காணும்
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1. 3 மாதங்களுக்கு ஒரு முறை கல்வி, மார்க்கம் மற்றும்
மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் TIYA சார்பாக நடத்துவது.
தீர்மானம் 2: நமது முஹல்லாவில் உள்ள ஆதரவற்ற முதீயோர்களுக்கு மாதாந்திர உதவிகளை நமது முஹல்லா சகோதரர்களிடம் நன்கொடை பெற்று அளிப்பது.
தீர்மானம் 3: நமது முஹல்லாவில் உள்ள பாக்கியத்துஸ் ஸாலிஹாத் பள்ளியின் பராமரிப்பு செலவினங்களுக்கு இரண்டு வருட காலங்களுக்கு அமீரக TIYA சார்பாக முக்கிய பங்களிப்பாளர்களிடம் நன்கொடை பெற்று அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
தகவல்:
நிர்வாகம்,
TIYA, அமீரகம்
No comments:
Post a Comment