துபை அரசு, முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் உலக அமைதி விருது கமிட்டியினர், அல் மனார் சென்டர் ஒத்துழைப்புடன் வருடந்தோறும் நடத்தப்பட்டு வரும் துபை சர்வதேச அமைதி மாநாடு இந்த வருடம் 'உண்மையான அமைதியின் மூலம் உலகை ஒன்றிணைப்போம்' என்ற இலக்குடன் இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் ஏப்ரல் 12, 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் துபை வேல்டு டிரேட் சென்டரில் நடைபெறவுள்ளது.
கருத்தரங்கம்
ஜூம்ஆ தொழுகை
இறுதி வெற்றிக்கு வழிகாட்டும் கண்காட்சி
வணிக அரங்கம்
சிறுவர் அரங்கம்
என சிறப்புடன் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில்
12.04.2012 வியாழன் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை
13.04.2012 வெள்ளி காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை
14.04.2012 சனி காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை பங்குபெறலாம்
அனுமதி இலவசம்
அனைத்து நம்பிக்கையுடைய மக்களும் கலந்து கொள்ளலாம்
இம்மாநாட்டின் கருத்தரங்கில் சர்வதேச அளவில் நல்லறிமுகமுள்ள கீழ்க்காணும் அழைப்பாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
அழைப்பாளர் சயீத் ரகீயா
அழைப்பாளர் அப்துல் ரஹீம் கிரீன்
டாக்டர் ஜாகிர் நாயக்
ஷைக் அப்துல் ரஹ்மான் அல் சுதைஸ்
ஷைக் மிஷாரி அல் அஃபாஸி
அழைப்பாளர்; யூசுப் எஸ்டெஸ்
அழைப்பாளர் தவ்பீக் சௌதுரி
அழைப்பாளர் முஹம்மது சாலேஹ்
அழைப்பாளர் அஹ்மது ஹமத்
அழைப்பாளர் ஹூஸைன் யீ
அழைப்பாளர் மாயன் குட்டி மதார்
அழைப்பாளர் அப்துல் பாரி யஹ்யா
அழைப்பாளர் முஹம்மமு அல் ஷரீஃப்
ஆகியோர் கலந்து கொண்டு இஸ்லாம் கூறும் உலக அமைதியை எடுத்தியம்பவுள்ளனர்.
No comments:
Post a Comment