அதிரை ஏ.எல்.மெட்ரிக். பள்ளியில் இன்று ( 29-03-2012 ) நடைபெற்ற 11 ஆம் ஆண்டு விழா பல்சுவை நிகழ்ச்சியில் பள்ளியின் நிறுவனர் சகோ. ஜனாப் அப்துல் ரெஜாக், பள்ளியின் நிர்வாகி சகோ. ஜனாப் பஷிர் அஹமது, பள்ளியின் முதல்வர் லட்சுமி ப்ரியா ஆகியோர்கள் பங்களிப்புடன் இனிதே ஆரம்பமானது.
சிறப்பு விருந்தினராக ஜனாப் சகோ. அன்வர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி, பாடப்பிரிவுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவித்தார்.
மாணவ, மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது கூடுதல் சிறப்பாகும்.
ஏராளமான பெற்றோர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Thanks : Shakkana M. NIJAM
அஸ்ஸலாமு அலைக்கும் தம்பி நிஜாம் வெளிநாடுகளில் வாழும் தந்தைகளுக்கு தங்கள் செல்ல குழந்தைகள் செய்து காட்டும் நிகழ்ச்சிகளை பார்க்க முடிய வில்லையே என்று ஏங்கி கொண்டிருந்த தங்களின் இந்த பதிவு நல்ல ஒரு வர பிரசாதமாக அமைந்தது ஒரு வேலை தந்தையர்கள் ஊரில் இருந்தாலும் கூட இப்படி பார்த்திருக்க முடியுமா என்றால் முடியாது என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் தங்களின் நல்ல முயற்சியால் மிக அருமையாக நேரில் பார்த்தது போன்று அமைந்திருந்தது மிக்க மகிழ்ச்சி தங்களின் இந்த நல்ல முயற்சி இன் நிகழ்சிகளின் காணொளி விரைவில் பதிவு செய்யவும் மிக்க நன்றி
ReplyDelete