கல்வி அறிவின் விளக்கு
ஆன்மாவின் உயிரோட்டம்
நன்னடத்தையின் எரிபொருள்
மகிழ்ச்சியும் பரந்த மனமும்
கல்வியால் ஏற்படும்
கல்வி தெளிவற்றை தெளிவாக்கும்
தவறியதை கண்டுபிடிக்கும்
மறைவானதை கண்முன் நிறுத்தும்
கல்வி கற்க இரவில் விழிப்பது
எனக்கு மிகவும் இனிமையானது
கடினமானவற்றைப் புரிந்து கொள்ள
தொடர்ந்து முயல்வது
எனக்கு மிகவும் விருப்பமானது,இதமானது
சுவையான உயர் ரக பானத்தை விட
கணினியில் எழுதும் போது எழும்
கீ போர்டின் ஓசை
மிகவும் இனிமையானது
காதலியின் ஓசையை விட
என் நிலையை அடைய முயல்பவனே!
சிகரத்தில் ஏறும்போது
தளர்ந்து பாதியில் திரும்பியவனுக்கும்
சிகரத்தைத் தொட்டவனுக்கும் இடையே
எவ்வளவு வேறுபாடு உண்டு?
நீ இரவு முழுவதும் அயர்ந்து உறங்குகிறாய்
நான் கண்விழித்து உழைக்கின்றேன்
என்னை வெல்ல இன்னும் உனக்கு ஆசை உண்டா?
அறிவு சிறந்த அருட்கொடை!
அறிவைச் சுமந்த ஆன்மா
ஆனந்தம் அமைதியை பெறுகிறது
நன்றி : வலையுகம்
No comments:
Post a Comment