Latest News

ஒசாமா கடலில் அடக்கம் செய்யப்பட வில்லை-விக்கி லீக்ஸ்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பாகிஸ்தான் அபோதாபாத்தில் ஒசாமா வசித்ததாக கூறப்பட்ட வீட்டில் புகுந்து அமெரிக்காவின் கடற்படையின் ரெட் ஸ்கூவாட்ரன் சீல் பிரிவைச் சேர்ந்த (Red Squadron of navy seals ) கமான்டோக்கள் அவரை 2-6-2011 அன்று 
சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கொல்லப்பட்டதும் அதிவேகமாக அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு கடலில் வீசப்பட்டு விட்டதாகவும் அன்றைய அமெரிக்க பத்திரிகைகள் கூறின. 

முறைப்படி அடக்கம் செய்யாமல் எப்படி கடலில் வீசலாம் என்ற எதிர்ப்பு சில இஸ்லாமிய நாடுகளிலிருந்து கிளம்பியதும் முறைப்படி இஸ்லாமிய சடங்குகள் செய்த பின்னரே கனமான பாலித்தீன் பையிலிட்டு பெட்டியில் வைத்து கடலில் அடக்கம் செய்யப்பட்டது என்று அடுத்த பல்டி அடித்தனர்.


இப்பொழுது அவரது உடலை கடலில் அடக்கம் செய்யப்படவில்லை என்றும் அமெரிக்காவின் உளவு நிறுவனமான 'சி.ஐ.ஏ.'வின் விமானம் மூலம் அமெரிக்காவின் பெத்ஸ்டாவில் உள்ள ராணுவ மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் உளவு நிறுவனத்தின்  இணையதளமான 'ஸ்ட்ராட்போர்'ரில் (Stratfor) ஸ்ட்ராட்ஃபார் துணை தலைவர் ஃப்ரைட் பர்டன் அனுப்பிய இ-மெயில் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் 'விக்கிலீக்' இணையதளத்துக்கு ரகசியமாக கிடைத்துள்ளதாகவும் விக்கிலீக்ஸ் அதை வெளியிட்டுள்ளதாகவும்  பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.


2-6-2011 அன்று ஒசாமா கொல்லப்பட்டதாக கூறப்பட்ட செய்தியை அமெரிக்கப் பத்திரிகைகளில் பரபரப்பு செய்தியாக வெளியிட்டதும் அதை உலகம் முழுவதும் உள்ள அமெரிக்காவின் ஆதரவு ஊடகங்களும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக அதை மிகப்பெரிய வீர, தீர செய்களைப்போல் சித்தரித்துக்காட்டி செய்திகள் வெளியிட்டன போதாக் குறைக்கு சீல் படையினரின் ஹெல்மட்டில் இணைக்கப்பட்ட சக்தி வாய்ந்த அதி நவீன கேமரா மூலம் மேல்படி திகிலூட்டும்(?) சம்பவத்தை துல்லியமாக படமெடுக்க ஏற்பாடு செய்து அதை வெள்ளை மாளிகையின் எமர்ஜென்ஸி ரூமில் லைவில் பார்க்க ஏற்பாடு செய்து ஒபாமாவும் வெள்ளை மாளிகையின் முக்கிய அமைச்சர்களும் கண்டு களித்தனர் அதை தொலைகாட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு டெலிகாஷ் செய்தன.

அப்பொழுதே உலக மக்களில் அதிகமானோர் மேல்படி சம்பவம் ஒரு மகா செட்டப் என்பதை புரிந்து கொண்டனர் இப்பொழுது அவைகள் அனைத்தும் உண்மை இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஒசாமாவின் உடல் கடலில் அடக்கம் செய்யப்படவில்லை எனும் சமீபத்திய விக்கி லீக்ஸின் தகவல் உண்மைப்படுத்தி விட்டது. 

ஒசாமாவை கடலில் அடக்கம் செய்யப்பட்டது உண்மை என்றால் கொல்லப்பட்டது ஒசாமா தான் என்பது உண்மை என்றால் அந்த உடலைத் தேடி வெளியில் கொண்டு வந்து அதை ஒசாமா இல்லை என்பதை நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன் ஆழ்கடலில் சென்று தேடி எடுக்க 4 லட்சம் டாலர் செலவாகும் இந்த செலவை மட்டும் அரசு ஏற்க தயாரா என்று 1972 ம் ஆண்டு முதல் கடலில் மூழ்கி கிடக்கும் கப்பல்களில் உள்ள பொருட்களை மற்றும் கடலில் இருக்கும் பொக்கிஷங்களை  தேடிக்கொடுக்கும் நிறுவனம் நடத்தி வரும் ஆழ்கடல் நீச்சல் வீரரான பில்வாரன் நியூயார்க் போஸ்ட்டுக்கு அளித்தப் பேட்டியை இப்பொழுது மீண்டும் ஒரு முறை இங்கே நினைவு கூறுகிறோம். 

இதற்கு அறவே வாய் திறக்காத ஒபாமாவின் மௌனத்தைக் கண்டு அன்றே இது ஒபாமா தயாரித்த மினி திரைபடம் என்பதை அமெரிக்கர்கள் முடிவு செய்து விட்டனர்.

சுடப்பட்டது ஒசாமாவும் கிடையாது அந்த உடல் கடலில் வீசப்படவும் கிடையாது என்பதற்கு அன்றே ஆதாரம் கிடைத்து விட்டது. 

விடாது விரட்டியது ஏன் ?
இரட்டை கோபுரத்தை ஒசாமா இடிக்கவில்லை என்பது அன்றைய புஷ்ஷீக்கும் தெரியும், இன்றைய ஒபாவுக்கும் தெரியும் பின் ஏன் அவரை விடாமல் இவர்கள் விரட்டினர் ?

ஆப்கானிஸ்தான் மாணவர்களைத் திரட்டி இஸ்லாமிய ஆட்சியை ஆப்கானிஸ்தானில் நிலை நிருத்தினார், அங்கு நிருவப்பட்டிருந்திருந்த (வணங்குவதற்கு ஒரு ஆள் கூட இல்லாத) பழமை வாய்ந்த புத்தர் சிலையை உலக எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் இடித்துத் தள்ளினார், பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகளை எரித்துத் தள்ளினார், இனிவரும் காலங்களில் யாரும் கஞ்சா செடிகளைப் பயிரிடக் கூடாது என்று சட்டமியற்றினார் ஒசாமா.

உலக போலீஸ்(?) அமெரிக்காவுக்கு கட்டுப்படாத இவரது போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த அமெரிக்காவை இவரது இஸ்லாமிய சிந்தனை நமக்கு ஆபத்தாக முடியலாம் என்று கருதிய இஸ்ரேல் தூண்டி விட்டது.

இவரை இப்படியே விட்டால் இன்று ஆப்கானிஸ்தான் நாளை பாகிஸ்தான் என்று குறுகிய காலத்தில் இஸ்லாமிய நாடுகள் அனைத்தையும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டு வந்து விடலாம் என்ற அச்சம் அவர்களின் உறக்கத்தை கலைத்தது அதனால் இடிக்கபட வேண்டிய நிலையில் இருந்த இரட்டை கோபுரத்தை இடிப்பதற்கு ஒசாமா பெயரை சூட்டி மக்களை ஒசாமாவுக்கு எதிராக திசை திருப்பியது தான் அன்றைய இரைட்டை கோபுர தாக்குதல் நாடகம்.

இழப்புகள்.
கடந்த செப்டம்பர் 11,2011ல் இரட்டைகோபுரம் அவர்களால் தரைமட்டமாக்கப்பட்டதிலிருந்து 2-6-2011 அன்று ஒசாமா கொல்லப்பட்டதாக புருடா விட்டது வரை 10 ஆண்டுகளில் செலவிடப்பட்டத் தொகை மட்டும்  1.3 டிரில்லியன் டாலர் (ரூ. 60 லட்சம் கோடி).


அமெரிக்க ராணுவ வீரர்கள் என்று சொல்லப்படுகின்ற கோழைகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மட்டும் ஆறாயிரம் பேர் இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்தோர் மூவாயிரம் பேர் இதையும் சேர்த்தால் மொத்தம் ஒன்பதாயிரம் பேர், உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்டு நிரந்தர முடமாக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 55  ஆயிரம் பேர்.

ஒசாமா கொல்லப்பட்டதாக புருடா விட்ட தினத்தன்று மட்டும் 31 சீல் படையினர் தாலிபான் விடுதலைப் போராளிகளால் ஹெலிகாப்டருடன் வைத்துக் கொளுத்தப்பட்டனர். 


மிகச் சிறந்த வீரர்களைக் கொண்ட அணி, மிகத் திறமை வாய்ந்த அணி, மிகவும் புத்திசாலித்தனமான அணி என்று அமெரிக்காவால் புகழப்படும் டீம்6 அணியினர் தான் மேல்படி ஹெலிகாப்டருடன் வைத்துக் கொளுத்தப்பட்ட சீல் பிரிவினர் இதை அறிந்து ஒபாமா அதிந்து விட்டதாக ஊடகங்கள் அறிவித்தன. ஒபாமா மட்டுமல்ல அனைவரையுமே அதிர வைத்தது.


ஒபாமா தயாரித்த மினி திரைப்படம் ஓர் ஃபளாஷ்பேக்
அமெரிக்க கடற்படையின் சீல்படையினர் இரண்டு ஹெலிகாப்டர்களில் அபோதாபாத்தில் பின்லேடன் வீட்டை நோக்கிப் பறந்தனர் அதில் ஒரு ஹெலிகாப்டர் தாலிபான் போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது அதில் இருந்த 31 சீல் படையினரும் எரிந்து சாம்பலாகி விட்டனர் ஒன்று மட்டும் ஒசாமாவின் வீட்டு மாடியில் போய் இறங்கியது.

வீட்டின் மாடியில் இறங்கியதும் அசுர வெகத்தில் இறங்கிய சீல் படையினர் வீட்டிற்குள் நுழைவதற்கு முன் வெளியில் நின்றவாறு நான்கு ரவுன்டுகள் சுட்டனர் இதன் பின்னரே வீட்டிற்குள் நுழைந்தனர். நுழைந்ததும் இவர்களைக் கண்ட ஒசாமா அவரது மனைவிக்குப் பின்னால் போய் ஒளிந்து கொண்டார் கணவரை காப்பாற்ற சீல் படையினருடன் அரவரது மனைவி கடும் போராட்டத்தில் ஈடுபட்டார் இறுதியில் சீல் படையினர் அவரையும் சுட்டார் அவருக்குப் பின்னால் ஒளிந்து கொண்ட ஒசாமாவையும் சுட்டுத் தள்ளினர். இதெல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் அதாவது சரியாக 90 வினாடிகளில் நடந்து முடிந்து விட்டது என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜான் பிரனனும்,  அமெரிக்காவின் ‘நேவி சீல்’ கமான்டர்  சக் பாரெர் என்பவரும் கூறுகின்றனர். இதில் ஜான் பிரணன் இரண்டு ஹெலிகாப்டர்கள் என்றும்,  சக் பாரெர் நான்கு ஹெலிகாப்டர்கள் என்றும் கூறுகின்றனர்.

சிந்திக்க சில துளிகள்.

இவர்கள் மேல்படி ஆப்பரேஷன் நடத்துவதற்கு முன் பாகிஸ்தானின் டாக்டர் ஷகீல் அப்ரிதி என்பவரை கைக்குள் போட்டு ஒசாமா இன்ன இடத்தில் தான் இருக்கிறார் அவரது டிஎன்ஏ வேண்டும் என்றுக் கேட்டுள்ளனர் அதற்காக அவரும் அபோதாபாத்தில் தடுப்பூசி முகாம் ஒன்றை அரசு அனுமதிப் பெறாமல் நடத்தி வீடு, விடாகச் சென்று அனைவருக்கும் தடுப்பூசி போட்டதாகவும் ஒசாமா வீட்டுக்குள் சென்ற பொழுது அவரைப் பார்க்க முடியவில்லை என்று டாக்டர் ஷகீல் அப்ரிதி சொன்னதாகவும்  இதை அறிந்த பாகிஸ்தான் அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் இங்கிலாந்தில் வெளிவரும் திகார்டியன் பத்திரிகை கூறியது.


அமெரிக்காவுக்கு காட்டிக் கொடுக்க டாக்டர் உதவினார் என்பதை அறிந்தே பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது ஒசாமாவுக்குத் தெரியாமல் போகுமா ? நம்மைத் தேடுகின்றனர் என்று அப்பொழுதே தலைமறைவாகி இருக்க மாட்டாரா ?   
தாலிபான் விடுதலை போராளிகள் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதும் மற்றொரு ஹெலிகாப்டர் எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதை அவர்கள் கவனிக்காமல் விட்டிருப்பார்களா ?
ஹெலிகாப்டர் வந்து இறங்கும் அளவுக்கு அழுத்தமாக கட்டப்பட்ட அந்த வீட்டில் வெறிப்பிடித்த நேட்டோபப் படையினரால் இரவு பகலாக தேடப்பட்டுவரும் ஒசாமா பதுங்கு குழிகளை அல்லது தப்பி ஓடும் வேறு வழிகளை அமைக்காமல் இருந்திருப்பாரா ?
மாடியில் ஹெலிகாப்டர் வந்திறங்கிய சப்தம் வீட்டிற்குள் கேட்காமல் இருந்திருக்குமா ? அதைக்கேட்டு குறைந்த பட்சம் வீட்டிற்குள் வேறு எங்காவது ஓடி மறையாமல் மனைவியின் பின் புறம் தான் ஓடி ஒளிவாரா ?
இரத்த வெறிப்பிடித்த நேட்டோப் படையினரால் இரவு பகலாக தேடப்பட்டுவரும் சர்வ தேச போராளி ஒருவர் தனது வீட்டின் ஹாலில் சாதாரண பனியன் லுங்கியுடன் ஆயுதமில்லாமல் ஹாயாக மனைவியுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பாரா ?  
இரத்த வெறிப்பிடித்த நேட்டோப் படையினரால் இரவு பகலாக தேடப்பட்டுவரும் சர்வ தேச போராளி ஒருவர் ஆயுதம் தரித்த போராளிகளை தனது பாதுகாப்பிற்கு நிருத்தாமல் தனித்திருப்பாரா ?
ஒரு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதும் மற்றொரு ஹெலிகாப்டர் ஒசாமா வீட்டை நோக்கிப் பறந்ததும் கண் இமைக்கும் நேரத்தில் ஒசாமாவுக்கு ( அங்கிருந்தது ஒசாமாவாக இருந்தால் ) தாலிபான்கள் தகவல் கொடுக்காமல் இருந்திருப்பார்களா ? அல்லது அவர்களே விரைந்து அங்கே வந்து சீல் படையினருடன் கடும் சண்டையில் ஈடுபட்டிருக்க மாட்டார்களா ?

என்ற எண்ணற்ற கேள்விக் கனைகளை ஒபாமாவை நோக்கிப் பாய்ந்தன அவைகள் எவற்றையும் செவி மடுக்காத ஒபாமா அமெரிக்காவின் பிரபல கடல் புதையல் வேட்டைக் காரர் பில்வாரன் விடுத்த அறிக்கைக்கும் பதிலளிக்க முடியாமல் திணறினார்.

இப்பொழுது தேர்தல் நெருங்கி விட்டதால் ஒபாமாவுக்கு ஒசாமாவின் இறந்த உடல் குறித்த மேட்டர் மிகப்பெரும் சலாவாலாக இருப்பதால் விக்கி லீக்ஸ் பார்வையில் படும் விதமாக தகவலை 'ஸ்ட்ராட்போர்'ரில் இ-மெயில் மூலம் கசிய விட்டு விட்டார்.

மக்கள் கேட்டால் அவரது அடக்கஸ்தலத்தை அவரது ஆதரவாளர்கள் வணக்கஸ்தலமாக ஆக்கி விடுவதுடன் அவரது ஆசியுடன் தீவிரவாதத்தில் ஈடுபட்டு விடலாம் எனும் காரணத்தை முன் கூட்டியே சொல்லி இருப்பதால் அதையேத் திருப்பி கோயபல்ஸ் ஸ்டைலில் கூறி மக்களை நம்ப வைத்து சுடப்பட்டது ஒசாமா தான் என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தேர்தல் வியூகம் அமைத்து செயல் பட முடிவு செய்து விட்டார்.

அறிந்து கொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையை மறைக்காதீர்கள்! திருக்குர்ஆன் 2:42.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.