வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்த கடனை வசூலிப்பதில் சட்டத்திற்கு முரணான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவது உண்டு. இதுப்போன்ற நடவடிக்கைகளை நீதிமன்றங்கள் கண்டித்து அது போன்ற நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தும் இருக்கின்றன.
இந்நிலையில் அரசுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தனது வாடிக்கையாளர்களிடமிருந்து கடன் நிலுவைத் தொகையினை வசூலிக்க கடன்தாரர்களின் பெயர்கள், படம் கொண்ட டிஜிட்டல் பேனர்கள் வைக்க முடிவு செய்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இருக்கும் கீரமங்கலம் பகுதியில் கொடுத்த கடனைத் திரும்ப வசூலிக்க கடன்தாரர்களின் பெயர்கள், படம் கொண்ட டிஜிட்டல் பேனர்கள் பகுதி முழுவதும் வைக்க கீரமங்கலம் ஐ.ஓ.பி., வங்கி முடிவு செய்துள்ளது. அதற்கு முன்பே கடன்களைத் திருப்பி செலுத்தி விடுங்கள் என அறிவித்து ஒரு டிஜிட்டல் பேனர் மாதிரிக்காக வங்கி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி தெரிவித்த வங்கி மேலாளர் யூசுப் அலி, “புதுக்கோட்டை மாவட்டத்திலேயே இந்த வங்கி கல்வி கடன் எட்டு கோடி ரூபாய் உள்பட மொத்தம் 10 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வழங்கியுள்ளது. இந்த வங்கியில் பல்வேறு காரணங்களுக்காகவும், வாங்கிய கடனைப் பலர் உரிய காலத்தில் செலுத்தவில்லை. இதனால் சரியாக கடனைத் திருப்பி செலுத்துபவருக்கும் கூட உடனே கடன் வழங்க இயலவில்லை.
கடன் திருப்பிச் செலுத்தும் கெடு முடிந்த நிலையில், கடனை வசூலிக்க எச்சரிக்கை கடிதம், வழக்குரைஞர் நோட்டீஸ், பலமுறை நேரில் சென்றும் கேட்டும், கடன் வாங்கியவர்கள் கட்டுவதில் தாமதம் ஏற்படுகிறது. சிலர் கடன் வாங்கியதிலிருந்து வங்கி பக்கம் வருவதே கிடையாது. அரசு தள்ளுபடி எப்படியாவது அறிவிக்கும் என காத்து கிடக்கின்றனர்.
இதனால் வங்கி சேவை பாதிக்கப்படுகிறது. கடனை வசூலிக்க ஒரு முன்னறிவிப்பாக டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகும் கடனைச் செலுத்தாதவர்களின் பெயர், படம் உள்ளிட்ட விவரங்கள் டிஜிட்டல் பேனரில் நகரில் பல இடங்களிலும் வைக்கப்படும்" என்றார்.
கடனை வசூலிக்க இது வங்கியின் அதிரடி நடவடிக்கை என்பதால், கடன் வாங்கியவர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment