Latest News

இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்ற சகோதரர்கள்


திருமங்கலக்குடி, எளிதில் யாரும் மறக்கும் ஊரல்ல, பரம்பரை கதை பேசி பள்ளிக்குள் சக முஸ்லீமை விட மறுக்கும் ஓர் கூட்டம், மறுப்போரை மறைந்தோராக்கும் இன்னொரு கும்பல் என அவர்தம் இழிச் செயல்கள் இஸ்லாத்தின் மீது பழியாய் படர, ஆனால் அல்லாஹ்வோ அவனை மட்டும் வணங்கும், அவனுக்கே கட்டுப்படும் மனிதர்களை அவர்களிலிருந்தே வெளிப்படுத்துகிறான்.

எண்ணங்களில் இல்லா எண்ணிக்கை முஸ்லீம்களுக்கு மத்தியில் இரு சகோதரர்கள் இஸ்லாத்தை உணர்ந்து உள்ளங்களில் ஏந்தினர்
முஹமது யாசீர்
கடந்த வாரம் 02.03.2012 வெள்ளியன்று, துபை மாநகரில் ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டன்டாக பணியாற்றும் சகோதரர் தமிழ்வாணன் (27) முஹமது யாசிர் என்றும்,
முஹமது இப்ராஹிம்
இந்த வாரம் 09.03.2012 வெள்ளியன்று, அபுதாபியில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஏசி டெக்னீஷியனாக பணிபுரிகின்ற சகோதரர் கலையமுதன் (23) முஹமது இப்ராஹீம் என்றும்,

உடன்பிறப்புக்களான இவ்விருவரும் இஸ்லாத்தை உள்வாங்கி, உணர்ந்து, உண்மை முஸ்லீமாய் வாழும் உன்னத நோக்குடன் தங்களின் வாழ்வியலாக இஸ்லாத்தை தெரிவு செய்து கொண்டனர்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருமங்கலக்குடி என்ற ஊரைச் சேர்ந்த சகோதரர்கள் இவ்விருவரும், சுமார் 5 வருடங்களுக்கு முன் இஸ்லாத்தை ஏற்ற தங்களின் மூத்த சகோதரர் முஹமது அவர்கள் மூலம் குர்;ஆன் தமிழாக்கம், ஹதீஸ் நூற்கள், புத்தகங்கள் பெற்று படித்தும், இஸ்லாத்தின் ஓப்பற்ற ஓரிறை கோட்பாடு, ஏற்ற தாழ்வற்ற சமத்துவம் பிடித்தும், தாங்கள் இருக்க வேண்டிய சரியான மார்க்கம் இஸ்லாமே என உணர்ந்தும், எத்தகைய நிர்பந்தங்களுமின்றி முஸ்லீம்களாய் மாறியதற்கான காரணிகளாய் ஒர் குரலில் கூறினர்.
முஹமது
இன்ஷா அல்லாஹ், தங்களுடைய பெற்றோருக்கும், தங்கைக்கும் இஸ்லாத்தை எத்தி வைத்து வருவதாகவும் விரைவில் அவர்களும் இஸ்லாத்தை ஏற்பார்கள் என இறையருள் மீது நம்பிக்கை தெரிவிக்கும் சகோதரர்கள் மூவருக்கும் ஓர் குறை, அது உள்ளத்தில் இத்துத்துவா காவிப் புழுதி படர்ந்து திரியும் தங்களின் மற்றொரு சகோதரனுக்கும் இஸ்லாம் சென்றடைய வேண்டும் என்பதே.

அவர்களின் சகோதரனுக்கும், பெற்றோர் மற்றும் தங்கைக்கும் தூய இஸ்லாம் கிடைத்திட, முன்மாதிரி முஸ்லீம்களாய் வாழ்ந்திட, அவர்கள் தொடர்ந்து செய்ய விரும்பும் தஃவா பணியில் வெற்றியடைந்திட நாமும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுவோமாக!

வேண்டுதல் :
அபுதாபி, முஸஃபா, ஐகாட் சிட்டியில் தங்கியுள்ள சகோதரர் முஹமது இப்ராஹிம் அவர்களுக்கு தொழுகை முறை, தூஆக்கள், குர்ஆன் ஒத பயிற்சி, சிறிய சூராக்கள் மனனம் போன்ற விஷயங்களில் உதவிட, தங்களுடைய ஒய்வு நேரத்தில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மட்டும் போதிக்க ஆர்வமுள்ள, வாய்ப்புள்ள சகோதரர்கள் எங்களை (aimuaeadirai@gmail.com)தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

இவ்வேண்டுதல் இயக்கரீதியாக செயல்படுபவர்களுக்கு அல்ல.

சந்திப்பு மற்றும் புகைப்படம்
அதிரை அமீன்
நன்றி :aimuaeadirai.blogspot.com

2 comments:

  1. இதை எழுதி இருக்கும் அதிரை அமீன் கூட பாக்கர் ட்ரஸ்ட் இல் இயக்க ரீதியாகச் செயல்படுபவராயிற்றே

    ReplyDelete
  2. முன்மாதிரி முஸ்லீம்களாய் வாழ்ந்திட, அவர்கள் தொடர்ந்து செய்ய விரும்பும் தஃவா பணியில் வெற்றியடைந்திட நாமும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுவோமாக

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.