நிலத்தை வாங்கும்போது பத்திரப்பதிவு அலுவலங்களில் அந்த ஆவணம் பதிவு செய்வது உண்டு. அப்போது அந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பீட்டின்படி (GUIDELINE VALUES) முத்திரைத்தாள் கட்டணத்தை பத்திரப்பதிவு அலுவலங்களில் அந்த நிலத்தை வாங்குபவர் செலுத்த வேண்டும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் நிலத்தின் தற்போதைய மதிப்பீட்டுக்கு ஏற்ப வழிகாட்டும் மதிப்பீட்டை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக பத்திரப்பதிவு அதிகாரிகள் அவர்களுக்கு உரிய பகுதிகளுக்கு சென்று வழிகாட்டும் மதிப்பீட்டை அறிந்து புதிய பட்டியல் தயாரித்து அரசிற்கு அளித்தனர்.
இதன் அடிப்படையில் நேற்றைய தினம் வெளியிட்ட தமிழக அரசின் பட்ஜெட்டில் “நிலத்தின் வழிகாட்டி மதிப்பு” வருகின்ற ஏப்ரல் 1– ந் தேதி முதல் திருத்தி அமைக்கப்பட்டு புதிய வழிகாட்டி மதிப்பீட்டை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் அரசிற்கு கூடுதலாக ரூ 600 கோடி வருவாய் கிடைக்கும்.
அதிரைப்பட்டினத்தில் உள்ள ஒவ்வொரு தெருவின் மதிப்பீடுகளும் பல மடங்குகளாக உயர்த்தி நிலத்தின் ஒரு சதுர அடியின் விலை கீழ்க்கண்டவாறு நிர்ணயம் செய்துள்ளார்கள்
தெருவின் பெயர் | வழிகாட்டி மதிப்பீடு | வழிகாட்டி மதிப்பீடு |
( பழையது ) | ( புதியது ) | |
ஆலடித் தெரு | 120 | 250 |
பிலால் நகர் | 40.00 | 100 & 150 |
ஆறுமுக கிட்டங்கி தெரு | 70.00 | 150.00 |
ஆதம் நகர் ( M.S.M NAGAR & K.S.A LANE ) | 40.00 | 100.00 |
செட்டித்தெரு | 120.00 | 500.00 |
ஹாஸ்பிட்டல் ரோடு | 120.00 | 500.00 |
காட்டுபள்ளிவாசல் தெரு | 70.00 | 250.00 |
வெற்றிலைக்காரத் தெரு | 80.00 | 200.00 |
சின்ன நெசவுக்காரத் தெரு | 100.00 | 250.00 |
ஹாஜா நகர் | 70.00 | 150.00 |
கடற்கரைத் தெரு | 80.00 | 250.00 |
தரகர் தெரு | 80.00 | 300.00 |
பாத்திமா நகர் | 40.00 | 100.00 |
காலியார் தெரு | 70.00 | 150.00 |
மேலத்தெரு | 80.00 | 200.00 |
மேலத்தெரு (சவுக்கு கொல்லை & சானா வயல்) | 70.00 | 250.00 |
பெரிய நெசவுக்காரத் தெரு | 120.00 | 250.00 |
நடுத்தெரு | 150.00 | 300.00 |
செக்கடி தெரு | 100.00 | 250.00 |
சேது ரோடு | 150.00 | 400.00 |
தட்டாரத் தெரு | 120.00 | 300.00 |
வண்டிப்பேட்டை | 90.00 | 200.00 |
புதுத் தெரு | 130.00 | 300.00 |
புதுமனைத் தெரு | 130.00 | 500.00 |
புதுக்குடி நெசவுத் தெரு | 70.00 | 100.00 |
கீழத் தெரு | 80.00 | 200.00 |
சால்ட் லேன் | 70.00 | 200.00 |
செட்டி தோப்பு | 150.00 | 500.00 |
ஹாஜியார் லேன் | 90.00 | 200.00 |
கரையூர் தெரு | 70.00 | 250.00 |
வள்ளியம்மை நகர் | 25.00 | 100.00 |
மதுக்கூர் ரோடு | 90.00 | 200.00 |
மரைக்காயர் லேன் | 100.00 | 300.00 |
பழஞ்செட்டித்தெரு | 120.00 | 500.00 |
பழஞ்செட்டித்தெரு கீழ் பக்கம் | 70.00 | 200.00 |
பட்டுக்கோட்டை ரோடு | 90.00 | 300.00 |
சாயக்காரத் தெரு | 130.00 | 200.00 |
ஏற்கனவே நமதூரில் மனைகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதில் பத்திரப்பதிவுக்காக செய்யப்படுகிற செலவுகளும் உயர்ந்தால் பாதிக்கப்படுவது ஏழை எளியோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தான். அவர்கள் நிலம் வாங்கி அதில் ஒரு வீடு கட்டி குடியேறும் திட்டம் என்பது வெறும் கனவாகவே அமைந்துவிடும் சூழல் ஏற்பட்டுவிடும்......................
குறிப்பு : ஒரே ஒரு ஆறுதலான செய்தி முத்திரைத் தீர்வையாக நாம் செலுத்தும் கட்டணத்திலிருந்து 1 சதவிதம் தமிழக அரசால் குறைக்கப்பட்டுள்ளது.
இறைவன் நாடினால் ! தொடரும்......................
Thanks : Shakkana M. Nijam
No comments:
Post a Comment