Latest News

அண்டார்டிகா கடலுக்குக் கீழே வியப்பூட்டும் ஒரு பாதாள உலகம்




அண்டார்டிகா கடல் பரப்பிலிருந்து எட்டாயிரம் அடிக்குக் கீழே இதுவரை அறியப்படாத ஒரு பாதாள லோகத்தை கண்டுபிடித்திருப்பதாகவும், வெளியுலகம் அறியாத பல புதிரான உயிரினங்கள் இருப்பதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறிகின்றனர்.
ஆக்ஸ்போர்டு, சவுத்தாம்டன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஒரு குழு, பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு அமைப்புடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட ஆய்வில் ஈடுபட்டது. அப்போது தாங்கள் ஒரு புதிய உயிரினத் தொகுப்பைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

அதில் பலவகை நண்டுகள், புதியவகையான ஆக்டோபஸ், நட்சத்திர மீன் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை, அறிவியல் உலகத்துக்கு முற்றிலும் புதியவை என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவ்வளவு ஆழத்தில் அந்த உரினங்கள் வாழ்வதில் இன்னொரு அசாதாரணமான விடயமும் உள்ளது. கடலுக்கு அடியில் உள்ள எரிமலைகளுக்கு மேலாக அந்த உயிரினங்கள் காணப்படுகின்றன.அந்த எரிமலைகள் சீறும்போது கரும்புகையைக் கக்குகின்றன. அப்போது 380 டிகிரி அளவுக்கு வெப்பநிலை உயருகிறது. காரீயத்தையே உருக்கிவிடக் கூடியதுதான், இந்த வெப்பநிலை.

சூரிய வெளிச்சத்துக்கே முற்றிலும் வாய்ப்பில்லாத நிலையில் இருக்கும் இருட்டில் அந்த உயிரினங்கள் வாழ்வதும் குறிப்பிடத்தக்கது. எரிமலைக் கரும்புகையில் உள்ள அதீத நச்சுத் தன்மை வாய்ந்த வேதிப்பொருட்களை உடைப்பதன் மூலம் அந்த உயிரினங்கள் தங்களுக்குத் தேவையான சக்தியைப் பெறுகின்றன.
இந்தப் பாதாள உலகத்தில் காணப்படும் இரு டஜன் புதிய உயிரினங்களில் “யெட்டி கிராப்“ என்ற உயிரினம்தான் அதிகளவில் உள்ளது. தலா 16 சென்டிமீற்றர் நீளமுடைய இவை, எரிமலை வாய் அருகே சுமார் 600 என்ற எண்ணிக்கையில் குவிந்திருக்கின்றன.

மற்றவகை நண்டுகளைப் போல் இல்லாமல் இவை தங்களின் மார்புப் பகுதியில் ரோமத்தாலான அடர்த்தியான அடுக்கைக் கொண்டிருக்கின்றன. இதில் பாக்டீரியாவை வளர்த்து, இவை உண்ணுகின்றன என்று கருதப்படுகிறது.

இங்கு ஒரு புதிய வகை ஆக்டோபஸையும் கண்டியிடித்திருக்கும் விஞ்ஞானிகள். அது இதுவரை அறியப்படாத ஒரு புது இனம் என்கிறார்கள். ஆனால், அதை விஞ்ஞானிகளால் பிடிக்க முடியவில்லை. மேலும், இங்கு காணப்பட்ட, ஏழு கரம் கொண்ட நட்சத்திர மீன் போன்ற உயிரினங்களும் விஞ்ஞானிகளின் ஆர்வத்தைக் கிளறியுள்ளன.



No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.