Latest News

அதிரையில் உள்ள ரேஷன் கடைகளில் முறைகேடா ?




நமதூரில் ஏறக்குறைய 10 ரேஷன் கடைகள் உள்ளது. தமிழக அரசால் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் நியாய விலைகளில் சீனி, மண்எண்ணெய், இலவச அரிசி, சமையல் எண்ணெய், உளுந்து, பருப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கின்றன.

ரேஷன் கடைகளில் இருக்க கூடிய விற்பனையாளர்கள் நாம் கேட்கக்கூடிய பொருள்கள் ஸ்டாக் முடிந்துவிட்டது என்று சொல்கிறாரா ? உண்மையிலே ஸ்டாக் தீர்ந்து விட்டதா ? இதன் உண்மை நிலவரத்தை நாம் தெரிந்து கொள்ள கீழ் கண்ட முறையை பின்பற்றி அறிந்து கொள்ளலாம்.
உங்க மொபைல் ல இருந்து [ PDS ] [ மாவட்டகுறியீடு எண் ] [ கடைஎண் ] //உதாரணத்துக்கு PDS 18 GC022 ( இங்கே 18 தஞ்சாவூர் மாவட்ட எண், GC022 கடை எண் ) அப்படின்னு டைப் பண்ணி 9789006492, 9789005450 இந்த ரெண்டு நம்பர் ல எதாச்சும் ஒண்ணுக்கு அனுப்புங்க. உங்களுக்கு தகவல் உடனே கிடைக்கும். # ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்குள் அனுப்ப முயற்சி பண்ணுங்க.

குறிப்பு : தங்களின் குடும்ப அட்டைகளின் முதல் பக்கத்தில் மாவட்ட குறீயீடு மற்றும் கடை எண் உள்ளது.

ரேஷன் கடைகளில் நடைபெறுகிற முறைகேடுகளை கீழ் கண்ட முறையில் ஆன்லைனில் நமது புகார்களை பதிவு செய்யலாம்.


1. இதற்க்கு முதலில் http://ccsconsumers.tn.nic.in/ccs_consumers/jsp/public_grievance.jsp இந்த லிங்கில் செல்லுங்கள்.
2. அதில் Consumer Complaints Related to PDS ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள்.
3. அதில் தங்களின் குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட, ரேஷன் கடை சம்பந்தப்பட்ட அல்லது மற்றவை எதுவாகிலும் அதை தேர்வு செய்து அதில் நம்முடைய புகார்களை தாக்கல் செய்துகொள்ளலாம்.
4. சகோதரர்களே, புகார்களில் பதியும் தங்களின் முகவரி தொடர்புகள் உண்மையானதாக இருக்க வேண்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம்.


மேலும் நமது புகார்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லலாம்.


தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் :-
மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி ( DSO )
Tel : 04362 231336
Mobile : 9445000286
E-mail : dso.tnj@tn.gov.in மற்றும் dso.tntnj@nic.in

பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகம் :-
உணவு வழங்கல் அதிகாரி ( TSO )
Tel : 04373 235049
Mobile : 9445000293
E-mail : tsotnj.patukottai@tn.gov.in

மேலே குறிப்பிடபட்டுள்ள அதிகாரிகளிடம் புதிய குடும்ப அட்டைக்கு பதிவு செய்தல், முகவரி மாற்றம் செய்தல், பெயர் திருத்தம் செய்தல், புதிய நபர்களின் பெயர் சேர்த்தல் மற்றும் ரேஷன் கடையை ஒரு தெருவில் இருந்து மற்றொரு தெருவில் உள்ள கடையில் பொருள்கள் வாங்க மாற்றம் செய்து கொள்ளுதல் போன்றவை தொடர்பாகவும் முறையிடலாம்.


இறைவன் நாடினால் ! அடுத்த பதிவில் “ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை “ பற்றி விளக்கமாக எளிய வடிவில் பார்ப்போம்.


அன்புடன்,
M. நிஜாமுதீன் B.sc.
( 9442038961 )

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.