ஊட்டியில் கடந்த ஒரு வார காலமாக பகலில் கொளுத்தும் வெயிலும் இரவில் அதிக குளிரும் நிலவியது. அடிக்கடி மாறும் கால நிலையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு உறைபனி கொட்டியது. ஊட்டி, தலைகுந்தா, காந்தல், படகு இல்லம், முக்குறுத்தி பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. தலைகுந்தா பகுதியில் நேற்று இரவு வெப்பநிலை 3 டிகிரியாக குறைந்தது. இதனால் பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் பெரிதும் அவதிப்பட்டனர். தொடர்ந்து வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் வெப்பநிலை 0 டிகிரியை தொட்டு விடும் என்ன தலை குந்தா பகுதி மக்கள் கூறினார்கள். வெப்பநிலை மிகவும் குறைந்து விட்டதால் வாகனங்களில் டீசல் உறைந்து விடுகிறது. இதனால் அதிகாலை வேளையில் வாகனங்களை இயக்க முடியவில்லை.
காலை வெகு நேரம் வரை வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடியே செல்கின்றன. கொட்டும் உறைபனியால் மலை காய்கறிகள் மற்றும் தேயிலை செடிகளும் அதிகம் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.
No comments:
Post a Comment