ஒரு பெண்ணின் வயிற்றில் 25 ஆண்டாக இருந்த பேனா ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த 25 ஆண்டாக வயிற்றில் லேசான வலி இருந்து கொண்டே இருந்தது. 76 வயதாகும் அவருக்கு சமீபத்தில் வலி அதிகரித்தது.
அவர் ஆஸ்பத்திரிக்கு போய் மருத்துவ பரிசோதனை செய்தார். அப்போது அவரது வயிற்றில் ஏதோ கம்பி போன்ற பொருள் இருப்பது தெரிய வந்தது. உடனே டாக்டர்கள் ஆப ரேஷன் செய்து அந்தப் பொருளை வெளியே எடுத்தனர். அது பேனா என்று தெரியவந்தது.
அந்த பேனா 25 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்தது. அந்தப் பேனாவால் வயிற்றில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது டாக்டர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பேனா அவரது வயிற்றுக்குள் எப்படி சென்றது என்று அவருக்கு நினைவு இல்லை என்றாலும் அதைப் பற்றிய சிந்தனையில் ஈடுபடாமல் உயிர் பிழைத்த சந்தோஷத்தில் இருக்கிறார்.
No comments:
Post a Comment