புதுடில்லி: மத்திய அரசி்ன் பிறபிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் உள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு 4 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் இது அமலாகும் எனவும் தெரிகிறது. மண்டல் கமிஷன் சிபாரிசின் படி மொத்தம் 52 சதவீத இட ஒதுக்கீட்டில் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாயப்புகளில் பிறபிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு வகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.
மேலும் இந்த ஒதுக்கீட்டில் சிறுபான்மையினத்தவர்களுக்கும் உள் ஒதுக்கீடு தேவை என பல்வேறு சிறுபான்மை அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. தேசிய சிறுபான்மை மற்றம் மத , மொழிகளுக்கான தேசிய கமிஷனும் உள்ஒதுக்கீட்டை பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில் அரசியல் மற்றும் சிறுபான்மையின விகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில்
தற்போது உள்ள இடஒதுக்கீட்டில் அனைத்து பிரிவு சிறுபான்மையினருக்கு 4 சதவீத உள்ஒதுக்கீடு செய்வது எனவும் இதற்கானஉத்தரவினை வரும் 2012-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்துவது எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக உ.பி.உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலை முன்வைத்து தான் இப்படி ஒரு திடீர் முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஏற்கனவே , முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு கோரி உ.பி. முதல்வர் மாயாவதி, மத்திய அரசை வலியுறுத்தியிருந்தார். எனவே தேர்தல் நேரத்தில் சிறுபான்மையினர் ஓட்டுவங்கியினை குறி வைத்து தான் மத்திய அரசு , இடஒதுக்கீட்டை அமல்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி : M. NIJAM
No comments:
Post a Comment