மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் ''ஆளும் கட்சி தேமுதிகவினரை சீண்டிப் பார்க்கிறது. எங்களைச் சீண்டி பார்க்க வேண்டாம்'' என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
பேருந்துக் கட்டணம், பால் விலை ஆகியவற்றை உயர்த்திய தமிழக முதல்வர் , மத்திய அரசு நிதி தராததாலேயே பேருந்துக் கட்டணம் மற்றும் பால் விலைகளை உயர்த்தியதாகச் சொல்லி இருந்தார். மத்திய அரசு தமிழக அரசுக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறி இருந்ததைப் பத்திரிக்கைகளில் படித்தேன். இதையே நானும் சொன்னால் காங்கிரசுக்கு ஆதரவாக பேசுவதாகச் சொல்வார்கள்.
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியே அதிமுக தலைமையிலான கூட்டணியை ஆதரித்தார்கள். தமிழக மக்களுக்கு ஆளும் அதிமுக அரசு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. தமிழகத்தில் குடும்ப ஆட்சி வேண்டாம் என்று எண்ணி வாக்களித்த மக்கள் தற்போது ஒரு கும்பல் ஆட்சியிடம் சிக்கிக் கொண்டார்கள்.
பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்த விஜயகாந்த் பேனர் வைக்கக் கூட காவல்துறை அனுமதி தர வில்லை என்று தெரிவித்தார். யாருக்கும் சகாயம் செய்யாதவர் எனப் பெயரெடுத்த சகாயம் தற்போது அதிமுக ஆட்சிக்கு சகாயம் செய்து வருவதாகவும், மதுரை காவல்துறை ஆணையர் கண்ணப்பன் அதிமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் விஜயகாந்த் கூறியுள்ளார்.
நன்றி: இந்நேரம்.காம்
No comments:
Post a Comment